பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் மானியம் ரூ.8,932 கோடிக்கு ஒப்புதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:மின் கட்டண மானியம், 8,932 கோடி ரூபாய் வழங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. குடிசை வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதுடன், சில தொழில்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதற்காக, மின்

சென்னை:மின் கட்டண மானியம், 8,932 கோடி ரூபாய் வழங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. குடிசை வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதுடன், சில தொழில்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு மானியமாக வழங்குகிறது.
மானிய தொகையை கணக்கிட்டு, மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பும். அந்த விபரங்களை சரிபார்த்து மானியம் வழங்க ஆணையம் ஒப்புதல் அளிக்கும்.அதன்படி, 2021 - 22ம் நிதியாண்டிற்கு, வீடுகளுக்கு 3,469 கோடி; விவசாயத்திற்கு 4,809 கோடி; குடிசைகளுக்கு 181 கோடி; பொது வழிபாட்டு தலங்களுக்கு 16 கோடி; விசைத்தறிக்கு 378 கோடி; கைத்தறிக்கு 6 கோடி; கூட்டுறவு சங்கங்களுக்கு 17 கோடி ரூபாய் என, மொத்தம் 8,876 கோடி ரூபாய் மானியம் வழங்க வலியுறுத்தி, ஆணையத்திற்கு சமீபத்தில் கடிதம் எழுதியது.

அதை பரிசீலித்த ஆணையம், மின் வாரியம் கேட்டதுடன், முந்தைய ஆண்டிற்கான மானியத்தில் கணக்கிடப்படாமல் இருந்த 56 கோடி ரூபாயையும் சேர்த்து, 8,932 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X