பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மழை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம்,நாமக்கல் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். பிற மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன்

சென்னை:'தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம்,நாமக்கல் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். பிற மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல், மிக கன மழை பெய்யலாம். சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, அரியலுார், பெரம்பலுார், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள், வட உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல், மிக கன மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல், மிதமான மழை பெய்யலாம்.

அதிகபட்ச வெப்பநிலை 34; குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 செ.மீ., மழை பதிவானது.அதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, imdchennai.gov.in என்ற இணையதளத்தை காணவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X