அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதென்ன மன்னிப்பு கடிதமா? தியாகராஜனை சீண்டும் 'மாஜி!'

Added : அக் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டலாக கூறினார்.சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து

சென்னை:''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டலாக கூறினார்.

சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, காமராஜர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின், ஜெயகுமார் அளித்த பேட்டி:விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடிக் கம்பம் நட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சொன்னால் தான் அனுமதி கிடைக்கும் என்கிற போது, ஸ்டாலினை விடுத்து, காவல் துறையினரை கறுப்பு ஆடு என, திருமாவளவன் விமர்சிக்கிறார். ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஆய்வு செய்த போது, மாணவர்களுக்கு தினமும் முறைப்படி வழங்க வேண்டிய பொரியல் இல்லை. அது குறித்து எதுவும் கேட்காமல், வணக்கம் கூறி சென்று விட்டார். இதற்கு பெயர் தான் ஆய்வா?

நான் 30க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். அப்போதெல்லாம் தனி விமானம் கேட்டதில்லை. சாதாரண பயணியர் விமானத்தில் தான் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி., கூட்டத்தில் பங்கேற்காத நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.

அது மன்னிப்பு கடிதமாகத் தான் இருக்கும். 'வளைகாப்புக்கு செல்ல வேண்டி இருந்ததால், ஜி.எஸ்.டி., கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவே மன்னியுங்கள்' என, அதில் கூறி இருப்பார் போல தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-அக்-202122:16:56 IST Report Abuse
தமிழவேல் லட்சணத்தைப் பாரு..... யோவ் நீ அந்தக்கட்டுமர டிவிக்கு எப்போ 1 லட்சம் குடுக்கப் போற ?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-அக்-202105:28:09 IST Report Abuse
Milirvan ஐயோ.. அடுத்த ரவுண்டு மூக்கு புடைக்க கத்த ஆரம்பிக்க போகிறார்..
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-அக்-202122:17:32 IST Report Abuse
தமிழவேல் 10 வருஷமா அந்த பொரியலை சாப்பிட்டது நீங்க தானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X