அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஒளிமயமான தமிழகத்தை அமைக்க பாடுபடுவோம்'

Updated : அக் 04, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (14+ 33)
Share
Advertisement
உசிலம்பட்டி :''கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்பட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க., ஆட்சி தான். ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகத்தை அமைக்க பாடுபடுவோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காந்தி ஜெயந்தியை
 'ஒளிமயமான தமிழகம், பாடுபடுவோம்'

உசிலம்பட்டி :''கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்பட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க., ஆட்சி தான். ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகத்தை அமைக்க பாடுபடுவோம்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த கிராம சபை கூட்டம் நடக்கிறது. காந்தியடிகளை மாற்றிய பகுதி மதுரை. இது உங்கள் கிராமம் மட்டுமில்ல நம்ம கிராமம். எல்லா மக்களும் நம்ம மக்கள் தான்.
இது என் ஆட்சி அல்ல. இது உங்கள் ஆட்சி. உங்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ள ஆட்சி.முதல்வராகி எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன்.
ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி தான்.

கடந்த 2006ல் பாப்பாபட்டி, கீரிமங்கலம், நாட்டார்மங்கலம், விருதுநகர் கொட்டச்சியேந்தலில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஏன் அந்த நிலை என்ற விஷயத்திற்குள் செல்ல விரும்பவில்லை. கிராம மறுமலர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க., தான்.ஏழை, பணக்காரன், வட மாவட்டம், தென்மாவட்டம் என பார்க்க போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகத்தை அமைக்க நாங்கள் பாடுபடுவோம்.
எல்லா மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழகம் முதல் மாநிலம் என்ற நிலை வர வேண்டும். அந்த நிலை வரும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக ஊராட்சி தலைவர் முருகானந்தம் வரவேற்றார். ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் தீர்மானங்கள் வாசித்தார். முதல்வரின் முதன்மை செயலர் உதயச்சந்திரன், கலெக்டர் அனீஷ்சேகர், ஊராட்சி துணை தலைவர் லட்சுமி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
பூரணகும்ப மரியாதை* முதல்வருக்கு கூட்டம் நடந்த ஒச்சாண்டம்மன் கோவில் பூஜாரிகள் சார்பில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

* கூட்டத்திற்கு செல்லும் வழியில் நாட்டாபட்டியில் வயலில் நெல் நடவு செய்த பெண்களிடம் முதல்வர் பேசினார். குறைகள் இருக்கிறதா என கேட்டார்.

* பாப்பாபட்டி ஊர் நுழைவாயிலில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு முதல்வர் தொட்டு கொடுத்த மாலையை பார்வர்ட் பிளாக் கட்சியினர் அணிவித்தனர்.

* கூடுதல் டி.ஜி.பி., செந்தாமரைகண்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* அனைத்து துறை உயரதிகாரிகளும் வந்திருந்தனர். கிராம சபை கூட்டம் என்பதால் அவர்கள் மக்களுடன் மக்களாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (14+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
03-அக்-202122:14:58 IST Report Abuse
a natanasabapathy மீண்டும் இருண்ட தமிழக மாக மாறி வருகிறது தினந்தோறும் மின்வெட்டு வாடிக்கை ஆகிவிட்டது. ஒளிராது
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
03-அக்-202121:53:08 IST Report Abuse
Duruvesan ஷோக்க கீரான்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-அக்-202119:14:52 IST Report Abuse
elakkumanan பாஸூ...நாலுநாள்தான் நிலக்கரி இருப்பு இருக்குதாம்...........கவனிங்க...........இருட்டுக்குள் நுழைந்து விடியலை தேடும் எம் கடை குடி இனம் இன்னும் என்னென்ன விடியல்களை அனுபவிக்க கொடுத்துவைத்திருக்கிரார்கலோ தெரியல...கருப்பு, அடர்கருப்பு, இளம் கருப்பு, இருட்டு, அடர் இருட்டு, வெளிர் இருட்டு, கும் இருட்டு, நடுநிசி இருட்டு, பேய் இருட்டு போன்ற பலவகைகளை பார்த்து மகிழ்வோம்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X