முதல்வரின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை மறுப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் பேச்சுக்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை மறுப்பு

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை, அக். 3- 'முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று கூறியதை மறுக்கிறேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'இந்தியாவில் தமிழகம் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை கொடுத்தது' எனக் கூறியுள்ளார். இது, முற்றிலும்

சென்னை, அக். 3- 'முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று கூறியதை மறுக்கிறேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'இந்தியாவில் தமிழகம் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை கொடுத்தது' எனக் கூறியுள்ளார். இது, முற்றிலும் தவறான தகவல்.கர்நாடகாவில் 2011 - 12ல் முதல் விவசாய பட்ஜெட் போடப்பட்டது. இரண்டாவதாக ஆந்திராவில் 2013 - 14ல் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டது.

எனவே, தமிழகம் மூன்றாவது மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை உருவாக்கியதற்கு பா.ஜ., சார்பில் பாராட்டுகிறேன். முதன்முதலாக தனி பட்ஜெட் என்பதை மறுக்கிறேன். தனி பட்ஜெட் போட்டது, முதல்வருக்கு பெருமை. மற்ற மாநில விவசாயிகள் பயன்பெறும், மத்திய அரசின் விவசாய சட்டத்தை மறுத்து தீர்மானம் போட்டது முதல்வருக்கு பெருமையோ பெருமை. ஆனால், பொறுமையாக நல்லது நடக்கும் எனக் காத்திருக்கும் விவசாய சொந்தங்கள் வாழ்விலோ வெறுமை, வறுமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X