அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தொழிற்சாலைகள் துவங்கயாரும் முன்வரவில்லை'

Updated : அக் 04, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ராணிப்பேட்டை :''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதால், தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன் வருவதில்லை,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம்,
'தொழிற்சாலைகள் துவங்க, வரவில்லை'

ராணிப்பேட்டை :''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதால், தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன் வருவதில்லை,'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம், இன்றைக்கு தி.மு.க., ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கின்றன.

இது நாடா அல்லது அமளிக்காடா என தெரியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு அதிகளவு ரவுடிகள் வந்துள்ளனர். இத்தனை ரவுடிகளை கைது செய்துள்ளோம் என பெருமையாக அறிக்கை விடுகிறது தி.மு.க., அரசு. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் தான் தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன்வரவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில் மின் தட்டுப்பாடு இல்லை. மின் மிகை மாநிலமாக இருந்தது. இன்றைக்கு அது கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க., 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்கின்றன. தி.மு.க., பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது. இதையெல்லாம், அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
03-அக்-202123:49:16 IST Report Abuse
Nagercoil Suresh ரௌடிகள் நேற்று பெய்த மளைக்கு இற்று முளைத்த காளான்கள் இல்லை. ரௌடிகள் முளைக்க சில ஆண்டுகள் தேவைப்படும் அதற்கு கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தான் முழு காரணம் என்பதை பால் குடிக்கும் குழந்தை கூட சொல்லுமே...
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202114:35:43 IST Report Abuse
Vittalanand எப்படி வருவார்கள்.?தொழில் யத்துவங்க பேச்சு க்கு முன்னே கட்டிங் எத்தனை என்று தானே பேசுவார்கள் ?
Rate this:
jagan - Chennai,இலங்கை
03-அக்-202118:05:52 IST Report Abuse
jaganபேச்சு வார்த்தையில் வேற என்ன பேசுவார்கள்?...
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202114:35:43 IST Report Abuse
Vittalanand எப்படி வருவார்கள்.?தொழில் துவங்க பேச்சு க்கு முன்னே கட்டிங் எத்தனை என்று தானே பேசுவார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X