'ஜல் ஜீவன்' இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி

Updated : அக் 04, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (10+ 24)
Share
Advertisement
புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும்
ஜல் ஜீவன், 5 கோடி வீடுகள், குடிநீர் பெருமிதம்!

புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக தமிழகம், மணிப்பூர், குஜராத், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பஞ்., தலைவர்களுடன், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது, ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது


அறிமுகம்இங்குள்ள ஏழை மக்கள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவை சுகாதாரமான குடிநீர் பெற, வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி செய்வதற்காக, 'ராஷ்ட்ரீய ஜல் ஜீவன் கோஷ்' திட்டத்தையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு குடிநீர் மட்டுமல்லாமல், அதிகாரமும் பரவலாக்கப்பட்டுள்ளது.சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019ம் ஆண்டு வரை நாட்டில் மூன்று கோடி வீடுகளுக்குத் தான் குடிநீர் இணைப்பு
வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 2019ல் ஜல் ஜீவன் இயக்கம் துவக்கப்பட்ட பின், 1.25 லட்சம் கிராமங்களில் ஐந்து கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டு ஆண்டுகளில் முடித்துள்ளோம். குழாய் வாயிலாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சமாக இருந்தது; தற்போது 1.60 கோடியாக உயர்ந்துஉள்ளது.ரயில் மற்றும் டாங்கர்கள் வாயிலாக நாட்டின் ஒரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நிலை ஏற்படக்கூடாது; இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கொள்கைகளை வடிவமைத்தவர்கள், மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டனர்.

அவர்கள் தங்கள் வீடுகளுக்கும், நீச்சல் குளத்துக்கும் மட்டும் தான் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தனர்.கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் ஏழ்மையைப் பார்க்கவில்லை; அவர்களை கவர மட்டுமே செய்தனர். மக்களுக்கு விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


கவர்ச்சி திட்டம்நல்ல கிராமத்தை உருவாக்க உழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் குறைபாடுகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, கிராம மக்களின் ஓட்டுகளை பெற முடியும் என நம்பினர். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுஉள்ளது. கழிவு மேலாண்மை அமைப்பை இரண்டு லட்சம் கிராமங்கள் துவங்கியுள்ளன. 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.காதி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தன்னிறைவு இயக்கத்தை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளாக இருப்பதாக பிரதமர் அதிருப்திடில்லியை தலைமையிடமாக வைத்து வெளியாகும், 'ஓபன்' ஆங்கில பத்திரிகைக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நம் நாடு கண்டுபிடிக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உலகின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை.
ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றதற்கு, சுயசார்பு கொள்கை தான் முக்கிய காரணம். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 69 சதவீதம் பேர் ஒரு 'டோஸ்' தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்; 25 சதவீதம் பேர் இரண்டு டோஸ் எடுத்துள்ளனர். டிச., இறுதிக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாக வைத்துள்ளோம். விமர்சனங்களை நான் நேர்மையான மனதுடன் மதிக்கிறேன்.

விமர்சனங்களை நான் ஏற்பவன் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மக்கள், குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்துகின்றனர். விமர்சனங்களை முன்வைக்க ஒருவர் நிறைய கடின உழைப்பு, ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். இதனால், சில சமயங்களில் நான் விமர்சகர்களை இழக்கிறேன்.சிறு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


இந்த சட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்கள், தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபற்றி வாக்குறுதியளித்தவர்கள், இப்போது இந்த சட்டங்களை கொண்டு வந்த பின் எதிர்க்கின்றனர். உலகில் எந்த பகுதியிலும் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்காத சூழலில், தடுப்பூசி இயக்கத்தை 2020 மே மாதத்தில் திட்டமிட்டபடி துவக்கினோம். முன்பு தடுப்பூசி கிடைக்க பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே அப்படி இல்லாமல் தடுப்பூசி திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்திருந்தோம்.

வேகமாகவும், திறமையாகவும் குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினோம். அதில் வெற்றி பெற்றுள்ளோம்.தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஏழைகள் காத்திருக்கவோ, லஞ்சம் கொடுக்கவோ தேவையில்லை. நகரத்தில் குடியேறியுள்ள ஏழை மக்கள், தங்கள் கிராமத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டிருந்தாலும், இரண்டாவது டோசை பணிபுரியும் நகரத்தில் எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் தடையின்றி தடுப்பூசி பெறுவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
03-அக்-202122:00:47 IST Report Abuse
sankaseshan பொய்ச்சொல்லற வித் தய் பற்றி டிரவுதாங்ககிட்ட கேளுங்கடா
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
03-அக்-202112:49:53 IST Report Abuse
Dhurvesh பத்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் எனது குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தனர். பத்தாண்டுகள்தான் ஆகின்றது. குழாய் உடைப்பு போன்ற எந்தவித பிரச்சினையும் இதுவரை இல்லை. கடந்தவாரம் புதிதாக சாலையை உடைத்து புதுக்குழாய் போட்டுவருகின்றனர். அந்த புதுக்குழாயிலிருந்து மற்றொரு இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கின்றனர். என்ன புதுசா என்று கேட்டால்... பழையது பிவிசி குழாய். தற்போது இரும்பு குழாய் பதிக்கின்றோம் என்று சொல்கின்றனர். இது ஜலஜீவன் திட்டத்தில் வருமா என்று தெரியவில்லை. நன்றாக இருக்கும் ஒன்றை மாற்றிவிட்டு புதிதாக அமைக்கும் அளவுக்கு நம்மிடம் நிதி வசதி அதிகமில்லை. இதையும் ஜலஜீவன் கணக்கில் சேர்த்திருப்பார்களோ என்ற ஐயம் வேறு.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03-அக்-202112:43:10 IST Report Abuse
K.n. Dhasarathan தண்ணீருக்கு ஒரு அமைச்சர், அமைச்சரவை போதாதா ? பிரதமர் பார்க்கணுமா? பற்றி எரிகிற பிரச்சனைகளை விட்டுவிட்டு நீரோ மன்னன் போல பிரதமர் பேசுவது நம் மக்கள் செய்த பாவம், பெட்ரோல் டீசல் காஸ் விலை கட்டுப்பாடில்லாமல் பறக்கிறது, இதில் உலக சந்தை விலை என்கிற உலக மஹா புழுகு வேறு, விவசாயிகள் பிரச்சனை ஒரு வருடமாக தலை நகரத்தை கேவலப்படுத்துகிறது, காரோண என்கிற துன்பம் பல அலைகளாக மக்களை துவம்சம் செய்துவிட்டது , இதிலும் இவருக்கு வெளிநாட்டு பயணம் கேட்கிறது, ஏன் காணொளி வேலை செய்யாதா அல்லது வெளி நாடு சென்றால் தான் அச்சு என்கிற கட்டாயமா ? எளிமைக்கு பெயர் போன காந்தி பிறந்த மண்ணில் தானே இவரும் பிறந்தார் ? மக்கள் பணம் மறவாதீர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X