சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி...: திருவள்ளூர்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
Advertisement
விபத்தில் வாலிபர் பலிதிருவள்ளூர்: புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், முனுசாமி மகன் ஜெகதீசன்,35. இவர், நேற்று முன்தினம், டிராக்டரில், வயல் வெளியில் உழுது கொண்டிருந்தார்.அப்போது, பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் டயரை மீட்க முயன்றபோது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், சிக்கிய ஜெகதீசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார்

விபத்தில் வாலிபர் பலி

திருவள்ளூர்: புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், முனுசாமி மகன் ஜெகதீசன்,35. இவர், நேற்று முன்தினம், டிராக்டரில், வயல் வெளியில் உழுது கொண்டிருந்தார்.அப்போது, பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் டயரை மீட்க முயன்றபோது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், சிக்கிய ஜெகதீசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூ - வீலர் பறிமுதல்


திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், நெமிலி அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, பதிவு எண் இல்லாமல் வந்த, ஹீரோ பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர்.பைக்கில் இருந்த மூட்டையை சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

செம்மரம் பறிமுதல்: இருவர் சிக்கினர்

நகரி: சித்துார் மாவட்டம், புத்துார் அடுத்த, வடமால்பேட்டை பகுதியில் இருந்து செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, புத்துார் வனத்துறையினர், அதே பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, முட்புதரில் பதுக்கி வைத்திருந்த, 10 செம்மரங்களை பறிமுதல் செய்து, இருவரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், வேலுார் மாவட்டம், பட்டைகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த அழகேசன்,35, வேணுகோபால், 32 என, தெரிய வந்தது. இருவரையும் கைது செய்தனர்.

நகை, பணம் திருடியவர்கள் கைது


நகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, கொத்தகொல்ல கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முரளிபாபு, 41, தேவயாணி, 37. இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், நாராயணவனம் அடுத்த, சித்துார் கண்டிகை அருகே, போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது பதிவெண் இல்லாத வந்த காரை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த முரளிபாபு, தேவயாணி ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், பிச்சாட்டூர், நாராயணவனம், எஸ்.ஆர்.புரம், புத்துார், காளஹஸ்தி ஆகிய இடங்களில் பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.இவர்கள் மீது எட்டு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் இருந்து, 394 கிராம் தங்கம், 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சாலை விபத்தில் ஒருவர் பலி


நகரி: சித்துார் மாவட்டம், பெத்தபஞ்சாணி அடுத்த, திப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 23. இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் பலமநேர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ராயல்பேட்டை அருகே, முன்னே சென்றுக் கொண்டிருந்த டிராக்டர் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த ரவியை, திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X