தற்சார்புள்ள நாடாக மாற்ற அமைச்சர் அமித் ஷா அழைப்பு | Dinamalar

தற்சார்புள்ள நாடாக மாற்ற அமைச்சர் அமித் ஷா அழைப்பு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி:''இந்தியாவின் 100வது சுதந்திர தின விழாவிற்குள், நம் நாட்டை தற்சார்புள்ளதாக மாற்ற கடுமையாக உழைப்போம் என 130 கோடி மக்களும் உறுதி ஏற்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திஉள்ளார். டில்லி செங்கோட்டையில் தேசிய பாதுகாப்பு படையினரின் 7,500 கி.மீ., கார் பந்தையத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். அத்துடன் 75வது சுதந்திர
தற்சார்பு ,   அமைச்சர் அமித் ஷா


புதுடில்லி:''இந்தியாவின் 100வது சுதந்திர தின விழாவிற்குள், நம் நாட்டை தற்சார்புள்ளதாக மாற்ற கடுமையாக உழைப்போம் என 130 கோடி மக்களும் உறுதி ஏற்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திஉள்ளார்.

டில்லி செங்கோட்டையில் தேசிய பாதுகாப்பு படையினரின் 7,500 கி.மீ., கார் பந்தையத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.
அத்துடன் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 41ஆயிரம் கி.மீ., சைக்கிள் பேரணியை நிறைவு செய்த மத்திய ஆயுதப்படை போலீசாரை, அமித் ஷா கொடியசைத்து வரவேற்றார்.


latest tamil news




இந்த நிகழ்ச்சிகளில் அமித் ஷா பேசியதாவது:இந்தியாவை தற்சார்பு நாடாக உருவாக்கவும், நாட்டின் பொருளாதாரம் 375 லட்சம் கோடி ரூபாயாக உயரவும், பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.அவர் கனவை நனவாக்க அனைத்து மக்களும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் ஒவ்வொருவரும் 100வது சுதந்திர தினத்திற்குள் நாட்டை சுய சார்புள்ள, வலிமையான நாடாக உருவாக்க உறுதி ஏற்கும்படி வேண்டுகிறேன்.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் இந்த நிகழ்ச்சிகள் இளைய தலைமுறையினரிடம் நாட்டுப் பற்றையும், பொறுப்புணர்வையும் துாண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X