ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.ராமநாதபுரம் நகர் அரண்மனைரோடு, வண்டிக்காரத்தெரு, அக்ரஹாரவீதி, மதுரை- ராமேஸ்வரம் ரோடு, அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்திற்கு இடையூறு

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.ராமநாதபுரம் நகர் அரண்மனைரோடு, வண்டிக்காரத்தெரு, அக்ரஹாரவீதி, மதுரை- ராமேஸ்வரம் ரோடு, அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.குறிப்பாக சந்தைத்திடல், அரண்மனை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் ரோட்டோர ஒதுக்கப்பட்ட இடத்தில் தள்ளுவண்டி, தரைக்கடைகள் வைத்து காய்கறி, பழங்கள், மீன்,கருவாடு வியாபாரம் செய்கின்றனர். இவர்களில் சிலர் அத்துமீறி ரோட்டில் வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட எஸ்.பி., கார்த்திக் உத்தரவின்படி சந்தைத்திடல் ரோடு, பஸ் ஸ்டாண்ட் ஆகிய வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் கேணிக்கரை போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டுஉள்ளனர். ரோட்டில் இடையூறாககடைவைப்பவர்களை கண்டித்தும், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X