பரமக்குடியில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழா

Added : அக் 02, 2021
Share
பரமக்குடி--பரமக்குடியில் சுதந்திரபோராட்ட வீரர்கள்,வாரிசுகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி, நடிகர் சிவாஜி உள்ளிட்டோரின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினம் என ஐம்பெரும் விழா நடந்தது.சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். காங்., சேவா தள பிரிவு மாநில செயலாளர் அப்துல் அஜீஸ்,

பரமக்குடி--பரமக்குடியில் சுதந்திரபோராட்ட வீரர்கள்,வாரிசுகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி, நடிகர் சிவாஜி உள்ளிட்டோரின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினம் என ஐம்பெரும் விழா நடந்தது.சங்க பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். காங்., சேவா தள பிரிவு மாநில செயலாளர் அப்துல் அஜீஸ், சங்க துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுரவ ஆலோசகர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.காந்தி சிலைக்கு காங்., மாநில செயலாளர் ஆனந்தகுமார் மாலை அணிவித்தார். தியாகி டி.வி.ராமசுப்பையர் படத்திற்குசோலைமலை சித்த மருத்துவ வைத்திய சாலை மேலாண்மை இயக்குனர்டாக்டர் வரதராஜன் மாலை அணிவித்தார்.தொடர்ந்து தலைவர்களின் படங்களுக்கு எச்.எம்.எஸ்., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், ஜமருல் உசேன், அருள்மேரி, வேளாண்மை துறை முன்னாள் உதவி இயக்குனர் மணவாளன்,ஆர்.டி.சி.சி. வங்கி முன்னாள் மேலாளர் வேலு, காமராஜர் கைத்தறிநெசவாளர் சங்க தலைவர்பாஸ்கரன் அஞ்சலி செலுத்தினர். நல்லாசிரியர்லட்சுமி நாராயணன் இனிப்பு வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X