பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர், கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) நீலேஸ்வர், காங்., மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, தி.மு.க., நகர் செயலாளர்கார்மேகம், நிர்வாகி குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ., சார்பில் மாவட்ட

ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர், கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) நீலேஸ்வர், காங்., மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, தி.மு.க., நகர் செயலாளர்கார்மேகம், நிர்வாகி குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்தனர். இளங்கோவடிகள் தெருவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டத்தில் 385 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பரமக்குடி: காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பரமக்குடி டச் கோச்சிங் சென்டர் சார்பில் மாணவர்கள் காந்தியின் படத்தை நவதானியங்களில் வரைந்து மகிழ்ந்தனர். ஓவிய ஆசிரியர் சத்தியமூர்த்தி, கோச்சிங் சென்டர் உரிமையாளர் கோபிநாத் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.* பா.ஜ.க., சார்பில் பரமக்குடி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், வர்த்தக அணி தலைவர் சண்முகம், சிறுபான்மை அணி அஜ்மல்கான், இளைஞரணி தலைவர் பிரதீப், வக்கீல் பிரிவு மோகன், அமைப்புசாரா பிரிவு செல்வேந்திரன், விவசாய அணி பாலா சிவா, வர்த்தக அணி விமல், முத்து சரவணன், இப்ராகிம் பங்கேற்றனர்.* எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி, சிவாஜி பிறந்த நாள் மற்றும் காமராஜ் நினைவு நாள் நடந்தது. காங்., மாநில துணைச் செயலாளர் கோதண்டராமன், ஆர்.டி.ஐ., பிரிவு மாநில செயலாளர் செந்தில், முன்னாள் ஐ.என்.டி.யு.சி.,தலைவர் சேஷய்யன், செயலாளர் மாதவன், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X