பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ்! அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை; பாலிதின் பயன்படுத்த தடை

Added : அக் 02, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிதின் பை, கப், கவர் ஆகியவற்றை விற்பனை செய்வது, பயன்படுத்து வது தடை செய்யப்பட்டுள்ளது. வரும், 7ம் தேதிக்குள், அவற்றின் விற்பனையை கடைக்காரர்கள் நிறுத்தி, மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம்


அவிநாசி : அவிநாசி பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிதின் பை, கப், கவர் ஆகியவற்றை விற்பனை செய்வது, பயன்படுத்து வது தடை செய்யப்பட்டுள்ளது.

வரும், 7ம் தேதிக்குள், அவற்றின் விற்பனையை கடைக்காரர்கள் நிறுத்தி, மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்ணில் மக்காத பொருட்களை பொது இடங்கள், சாக்கடை கால்வாய், ரோட்டோரம் வீசிச்செல்வதும், சட்டப்படி குற்றம், என பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். சுட்டிக்காட்டிய 'தினமலர்'அவிநாசி பேரூராட்சியை ஒட்டிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் பாலிதின் விற்க, பயன்படுத்த தடை விதித்து,

அறிவிப்பு வெளியிட்டது.ஒரு குறிப்பிட்ட ஊராட்சியில் மட்டும், பாலிதீன் தடையால் பெரிதாக பயன் கிடைக்காது எனவும், அருகேயுள்ள அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகத்தினரும் பாலிதின் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, கடந்த முதல் தேதி, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியானது.இதன் தொடர்ச்சியாக, அவிநாசி பேரூராட்சி பகுதியில், அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாட்டுக்கு நிர்வாகம் தடை விவகாரத்தை கையில் எடுத்திருப்பது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X