கமுதியில் மழை பெய்தாலே மின்சாரம்துண்டிப்பு: மக்கள் தவிப்பு| Dinamalar

கமுதியில் மழை பெய்தாலே மின்சாரம்துண்டிப்பு: மக்கள் தவிப்பு

Added : அக் 02, 2021
Share
கமுதி--கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தாலே மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி பேரூராட்சி, கண்ணார்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி, தலைவநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கோட்டைமேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம்

கமுதி--கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தாலே மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி பேரூராட்சி, கண்ணார்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி, தலைவநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கோட்டைமேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே லேசான சிறுசாரல் மழை பெய்தால் கூட மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தண்ணீரும் சரிவர வருவதில்லை.மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X