சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, துராபள்ளம் பஜார் பகுதியில், ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த மாதம், 15ம் தேதி, அங்கிருந்து ஏ.டி.எம்., இயந்திரத்தை, வெல்டிங் செய்து பணத்தை கொள்ளைஅடிக்க முயன்ற நான்கு பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.அவர்கள் விட்டு சென்ற கார் மற்றும் வெல்டிங் இயந்திரத்தை கைப்பற்றி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, துராபள்ளம் பஜார் பகுதியில், ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த மாதம், 15ம் தேதி, அங்கிருந்து ஏ.டி.எம்., இயந்திரத்தை, வெல்டிங் செய்து பணத்தை கொள்ளைஅடிக்க முயன்ற நான்கு பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

அவர்கள் விட்டு சென்ற கார் மற்றும் வெல்டிங் இயந்திரத்தை கைப்பற்றி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், அந்த நான்கு கொள்ளையர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்ஜித், 28, சோஹில், 18, ஹர்சாத், 34, லுக்மன், 19, ஆவர்.இதற்கு முன், அரக்கோணத்தில் நடைபெற்ற ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும், அவர்கள் பயன்படுத்திய கார், ஆந்திர மாநிலத்தில் திருடியது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X