பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.சமரச தீர்வு மைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், மாவட்ட அரசு குற்றவியல்

ராமநாதபுரம்--ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.சமரச தீர்வு மைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் கருணாகரன், வக்கீல் மோகன்பாபு, கூடுதல் அரசு குற்றவியல்வக்கீல் ராமமூர்த்தி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்சித்ரா, பட்டணம்காத்தான்நாடார் மகாஜனசபை தலைவர் சாத்தையா, வி.ஏ.ஓ., செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது, துாய்மை பாரதம் திட்டத்தில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது, ஊராட்சியில் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி செயலர் நாகேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X