3.10 நிமிடம்; 50 திருக்குறள் சிவதர்ஷினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3.10 நிமிடம்; 50 திருக்குறள் சிவதர்ஷினி

Added : அக் 02, 2021
Share
கவுண்டம்பாளையம் : பி.என்.டி., காலனியை சேர்ந்த லிங்கமூர்த்தி - பாலமகேஸ்வரி தம்பதி மகள் சிவதர்ஷினி, 15; கோவையில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே தமிழ் மொழி மீது அதிக ஆர்வம் உள்ளவராக இருந்தார். மொழி சார்ந்த பல விஷயங்களை பெற்றோர் கற்றுத்தந்தனர். அதன் பலனாக பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார்.தமிழ் மொழி சார்ந்து
 3.10 நிமிடம்; 50 திருக்குறள்  சிவதர்ஷினி

கவுண்டம்பாளையம் : பி.என்.டி., காலனியை சேர்ந்த லிங்கமூர்த்தி - பாலமகேஸ்வரி தம்பதி மகள் சிவதர்ஷினி, 15; கோவையில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

சிறு வயதில் இருந்தே தமிழ் மொழி மீது அதிக ஆர்வம் உள்ளவராக இருந்தார். மொழி சார்ந்த பல விஷயங்களை பெற்றோர் கற்றுத்தந்தனர். அதன் பலனாக பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார்.தமிழ் மொழி சார்ந்து சாதனை செய்ய நினைத்து, 50 திருக்குறளை வேகமாக ஒப்புவிக்க பயிற்சி எடுத்துள்ளார். செய்ந்நன்றி அறிதல், பொறையுடைமை, சிற்றினம் சேராமை, நட்பாராய்தல் மற்றும் கொடுங்கோன்மை ஆகிய ஐந்து அதிகாரங்களில் இருந்து, 50 திருக்குறளை, 190 வினாடிகளில் வேகமாக ஒப்புவித்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

இதுபற்றி பேசும்போது, ''50 திருக்குறள் சொல்லி முடிக்க, 2.5 நிமிடம் போதுமானது; உச்சரிப்பு மாறாமல் நிதானமாக சொல்வதால், 190 வினாடிகள் தேவைப்பட்டது,'' என, கூறுகிறார் சிவதர்ஷினி. அவர் மேலும் கூறுகையில், ''எனக்கு சின்ன வயசுல இருந்தே திருக்குறள் படிப்பது ரொம்ப பிடிக்கும். இதற்கு காரணமே எங்கள் பள்ளிதான். ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் சார்ந்த பல போட்டிகள் நடத்துவர். ஒரு மணி நேரத்தில், 1,330 குறள்களையும் ஒப்புவித்து, உலக சாதனை படைக்க வேண்டும் என்கிற ஆசையில், அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X