பொது செய்தி

தமிழ்நாடு

மழையாய் பொழியும் பேரன்பு... மாணவரின் மன அழுத்தத்திற்கு மாமருந்து

Added : அக் 02, 2021
Share
Advertisement
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது அந்த அரசு பள்ளி வளாகம். பசுமை போர்த்திய மரங்களினுாடே பயணித்த காற்று, தென்றலாக தாலாட்டி கொண்டிருந்தது.இயற்கை கொஞ்சும் அந்த வளாகத்தில், சிறிய சைக்கிள் ஒன்றை பெரியவர் ஒருவர் ஓட்ட, சிறுவர்கள் இரண்டு, மூன்று பேர் தொற்றி கொள்கின்றனர். அப்படியே கிராமத்துக்கு மண் ரோட்டில் றெக்கை கட்டி பறக்கிறது அந்த சைக்கிள்.சைக்கிள் ஓட்டியவர் ஒரு


மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது அந்த அரசு பள்ளி வளாகம். பசுமை போர்த்திய மரங்களினுாடே பயணித்த காற்று, தென்றலாக தாலாட்டி கொண்டிருந்தது.இயற்கை கொஞ்சும் அந்த வளாகத்தில், சிறிய சைக்கிள் ஒன்றை பெரியவர் ஒருவர் ஓட்ட, சிறுவர்கள் இரண்டு, மூன்று பேர் தொற்றி கொள்கின்றனர்.

அப்படியே கிராமத்துக்கு மண் ரோட்டில் றெக்கை கட்டி பறக்கிறது அந்த சைக்கிள்.சைக்கிள் ஓட்டியவர் ஒரு தலைமையாசிரியர் என்பதும், அவருடன் பயணித்தவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இது குறித்த தகவல்கள் மேலும் சுவாரசியாக இருக்கிறது.பல்லடம் அடுத்த, சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபுத்துார் அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன். கல்வி கற்பிப்பது மட்டுமன்றி, மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு, மற்றும் வீட்டு நுாலகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இது குறித்து அவரிடம் பேசினோம்...பள்ளிகள் செயல்படாததால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக, கொரோனா காலத்திலும், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தினோம்.தொற்று பாதிப்பு குறைந்து, பள்ளிகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க, அவர்களுடன் சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கெட், வாலிபால் விளையாடுகிறேன். பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் புத்துணர்வுடன் கல்வி கற்க வேண்டும், என்றார் அந்த தன்னெழுச்சி மிக்க தலைமையாசிரியர்.மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தலைமையாசிரியர் கணேசனின், இந்த புத்தாக்க முயற்சியை, கிராம மக்கள் பலரும் பாராட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X