பொது செய்தி

தமிழ்நாடு

மகனின் வெற்றி சகாப்தம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
''எ ன் மகனுக்கு ஒன்றரை வயதில் இருந்தே, முறையாக பயிற்சி அளித்ததால், முதல் முயற்சியிலே, ஐ.ஏ.எஸ்., ஆகி விட்டார். மாற்றுத்திறன் என்பது, ஒருபோதும் சாதனைக்கு தடையல்ல,'' என்கிறார், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ள ரஞ்சித்தின் தாய் அமிர்தவல்லி. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, தன்னம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இவர், பிறவியிலே காது கேட்கும் தன்மை இழந்தவர். பிறந்த ஆறு மாதத்திலேயே
 மகனின் வெற்றி சகாப்தம்

''எ ன் மகனுக்கு ஒன்றரை வயதில் இருந்தே, முறையாக பயிற்சி அளித்ததால், முதல் முயற்சியிலே, ஐ.ஏ.எஸ்., ஆகி விட்டார். மாற்றுத்திறன் என்பது, ஒருபோதும் சாதனைக்கு தடையல்ல,'' என்கிறார், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ள ரஞ்சித்தின் தாய் அமிர்தவல்லி. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, தன்னம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இவர், பிறவியிலே காது கேட்கும் தன்மை இழந்தவர்.

பிறந்த ஆறு மாதத்திலேயே கண்டறிந்த, இவரது தாய் அமிர்தவல்லி, சிறப்பு பள்ளி இருக்கும், கோவைக்கு இடம்பெயர்ந்தார். வரதராஜபுரத்தில் உள்ள கஸ்துாரிபா காந்தி காதுகேளாதோர் வாய்மொழி பயிற்சி பள்ளியில், ஒன்றரை வயதில் இருந்தே பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.அமிர்தவல்லி நம்மிடம் பகிர்ந்தவை:என் மகனுக்காக சிறப்பு பி.எட்., படித்து, காதுகேளாதோருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து கற்றேன். இதை மற்ற குழந்தைகளுக்கும் சேர்ப்பிக்க, கஸ்துாரிபா காந்தி பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன்.

தற்போது தலைமையாசிரியராக உள்ளேன்.நுாறு சதவீதம் காது கேட்காத குழந்தைகளையும், இரு ஆண்டுகள் பயிற்சி அளித்து பேச வைக்க முடியும். சைகை, உதடு அசைவு மூலம், வார்த்தைகளை உள்வாங்கி பேச வைக்கலாம். இக்குழந்தைகளிடம் கூடுதலாக ஒரு அபரிமிதமான திறமை ஒளிந்திருக்கும். அதை அடையாளம் கண்டு முறையாக வழிநடத்தினால், அவர்களால் எந்த பதவியையும் அடைய முடியும்.பிறந்த ஆறு மாதத்திலே, ஒரு குழந்தைக்கு காது கேட்கிறதா, ஒலி வரும் திசையை குழந்தை கவனிக்கிறதா என கண்டறிவது அவசியம்.

பெரிய சத்தம் கேட்டும், எந்த அசைவும் இல்லாதிருக்கும்போது, அக்குழந்தையை பரிசோதிப்பது அவசியம்.காதுகேளாத குழந்தைகளை சிறப்பு பள்ளியில் மட்டும் சேர்த்து விட்டால் போதாது. பெற்றோரும் பயிற்சி பெறுவது அவசியம். அரசு வேலைவாய்ப்பில், காதுகேளாதோருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்தினால், அரசு வேலையில் முன்னுரிமை பெறலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X