பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு: ஊரை காலி செய்கிறோம் என மனு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களை தவிர மீதி இடங்களில், காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். ஊராட்சி தலைவர்சுபத்ரா தலைமை
 கிராம சபை கூட்டத்தில் தள்ளுமுள்ளு: ஊரை காலி செய்கிறோம் என மனு

திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களை தவிர மீதி இடங்களில், காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

ஊராட்சி தலைவர்சுபத்ரா தலைமை தாங்கினார்.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழையை ஒட்டி ஏரி, குளம், குட்டை மற்றும் நீர் வடிகால்கள் துார் வாரும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

பின், காக்களூர் ஊராட்சியில் பொதுநிதி செலவினம்,கொரோனா தொற்று விழிப்புணர்வு, மழை நீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சல்தடுப்பு உட்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.கடம்பத்துார் ஒன்றியம்மப்பேடு ஊராட்சி, மேட்டுச்சேரி கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சித்தைய்ய ஜெகதீசன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அரசு வழங்கும் பொருட்களை தன் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுத்து 100 நாள் திட்டம் உட்பட பல்வேறு பணிகளில் முறைகேடுகள் செய்வதாகவும் கூறி, கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து, கையெழுத்திடாமல் சென்றனர்.

கூவம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கையெழுத்திடுவோம் எனக் கூறி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஒன்றிய அலுவலர் ராம்குமார் சமாதானம் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறியதை அடுத்து, பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.


நல்ல குடிநீர் இல்லை

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி ஊராட்சி கூட்டம், தலைவர் சிவகாமி தலைமையில் நடந்தது.இதில் பங்கேற்ற மக்கள், 'இந்த ஊராட்சியில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. உப்புத்தன்மையுடன் தான் தண்ணீரை குடிக்க வேண்டிய நிலை உள்ளது' என முறையிட்டனர். சேரில் எம்.பி., - எம்.எல்.ஏ.,மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், தலைவர் பாபு தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், எம்.பி., ஜெயக்குமார், எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

வழக்கமாக, கிராமசபை கூட்டங்களில் பங்கேற்போர் அனைவரும் தரையில் அமர்ந்து விவாதிப்பர். நேற்றைய கிராமசபை கூட்டத்திற்கு வந்திருந்த எம்.பி.,- எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பொதுமக்களுடன் தரையில் அமராமல், சேரில் அமர்ந்திருந்தனர்.கூட்டத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், நகராட்சியுடன் இணைவதால், ௧௦௦ நாள் பணி பாதிக்கும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.


ஊரே காலி

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், டி.என்.ஆர்.கண்டிகை கிராம மக்கள் பங்கேற்று, 'எங்கள் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், ஏரியில் இறங்கி சென்று கொண்டிருந்தோம். தற்போது ஏரி, தண்ணீர் நிரம்பி உள்ளதால் கிராமத்திற்கு செல்ல முடியவில்லை.'சாலை வசதி இல்லாததால், 100 குடும்பத்தினரும் ஊரையே காலி செய்து வனப் பகுதியில் குடியேறுகிறோம்' என, புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சி, சித்துார்நத்தம் கிராம சபை கூட்டத்தில், 'தன் பெயரை அழைப்பில் குறிப்பிடவில்லை; அழைப்பும் விடுக்கவில்லை' என, அந்த ஊராட்சியைச் சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் குற்றஞ்சாட்டி பேசினார்.இதனால், ஊராட்சி தலைவர் உஷா தரப்பினருக்கும், ஒன்றிய குழு தலைவர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ரகளையானது.அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கிருந்த போலீசார், இரு தரப்பினரையும் பிரித்து, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஊராட்சியில், சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.கிராம பசுமை இயக்கம்சார்பில், கிராம வளர்ச்சிக்கான கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. அதில், சாலை விரிவாக்கம், கோவில் குளம் துார் வாருதல் மற்றும் அம்மையார்குப்பத்தில் புதிய கால்நடை மருந்தகம்தேவை என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- நமது நிருபர்கள் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X