தீக்கிரையான தாசில்தார் அலுவலகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்கிரையான தாசில்தார் அலுவலகம்

Added : அக் 02, 2021
Share
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக தரை தளத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.மின் ஒயர்களில் மளமளவென தீ பரவியதால் கட்டுக்கு அடங்காமல் போனது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில், முக்கியஆவணங்கள், ஆறு கணினி, ஐந்து பிரின்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மேஜை,
 தீக்கிரையான தாசில்தார் அலுவலகம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக தரை தளத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

மின் ஒயர்களில் மளமளவென தீ பரவியதால் கட்டுக்கு அடங்காமல் போனது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில், முக்கியஆவணங்கள், ஆறு கணினி, ஐந்து பிரின்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள் எரிந்து நாசமாகின.தாசில்தார் அலுவலகம் முழுதும் கரும்புகை சூழ்ந்து கொண்டதால், எஞ்சிய ஆவணங்களை மீட்கும் பணி தாமதமானது. தீ விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X