இலை, தழை உணவே... நோய் நீக்கும் மருந்தாய்!| Dinamalar

தமிழ்நாடு

இலை, தழை உணவே... நோய் நீக்கும் மருந்தாய்!

Added : அக் 02, 2021
Share
'பாட்டி வைத்தியம்' என்ற பெயரில், முதியோர் கூறிய உணவு முறையால், சிறு உடல் உபாதைகள் குணமாகியது; பெரிய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. அப்படியெல்லாம், இலை, தழைகளை கொண்டே, மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆடு, மாடுகளுக்கும் நமது முன்னோர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்.தமிழகத்தில் மட்டும், 100 வகையான, மருத்துவ குணம் நிறைந்த செடி, கொடிகள், மரங்கள், வேலிகளில் வளர்க்கப்பட்டதாக கூறுகிறார்,
 இலை, தழை உணவே... நோய் நீக்கும் மருந்தாய்!

'பாட்டி வைத்தியம்' என்ற பெயரில், முதியோர் கூறிய உணவு முறையால், சிறு உடல் உபாதைகள் குணமாகியது; பெரிய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. அப்படியெல்லாம், இலை, தழைகளை கொண்டே, மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆடு, மாடுகளுக்கும் நமது முன்னோர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்.தமிழகத்தில் மட்டும், 100 வகையான, மருத்துவ குணம் நிறைந்த செடி, கொடிகள், மரங்கள், வேலிகளில் வளர்க்கப்பட்டதாக கூறுகிறார்,

பொது சுகாதாரத்துறையில், பூச்சியியல் வல்லுனராக இருக்கும் சிவக்குமார்.சூலுார், ராசிபாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது முன்னோர்கள் சித்த வைத்தியர்களாக இருந்துள்ளனர். மூலிகைகள் குறித்து, 10 வயதின் போதே அறிந்திருந்தார். 'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை சந்தித்தோம். அருகே உள்ள வேலி மரங்களை பார்த்து, அவற்றின் குணங்களை விளக்கினார்.''உயிர்வேலியை அழித்ததால்... நமது முன்னோர் பயன்படுத்திய அற்புதமான மூலிகைகளை இழந்துவிட்டோம்...'' என்று ஆரம்பித்தார்.நம் முன்னோர்கள், சித்த மருத்துவத்தையும், மருத்துவ வேலி மூலிகை உணவு முறையையும் பிரித்து வைத்திருந்தனர்.

சாதாரண இலை, தழைகளின் மூலம், சுய வைத்தியம் பார்த்து கொண்டனர். எது சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து வைத்திருந்தனர்.எது உணவு... எது மருந்து?மனிதர்களின் பிரச்னைக்கு பயன்படுத்திய, இலை, தழைகளையே, ஆடு, மாடுகளுக்கும் பயன்படுத்தினர். பிற விலங்கு களும், தானாக அந்த இலை, தழைகளை தேடித்தின்றன. பசுவின் மடிவீக்க நோய்க்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது; அந்த காலத்தில், 'ஆதண்டை' கொடியை அரைத்து, குடிக்க கொடுத்து, எளிதாக குணப்படுத்தினர். பிரசவித்த பெண்களுக்கும், இதை கஷாயமாக கொடுத்தனர்.செலவு ரசத்தின் மகிமைவீடுகளில், 'செலவு ரசம்' என்ற பெயரில், பல இலை, தழைகளை உணவாக சேர்த்து, நோய்க்கவசம் ஏற்படுத்திக்கொண்டனர்.

இதனால், பல்வேறு உபாதைகளில் இருந்து தற்காத்துக்கொண்டனர். நாங்களும், கள ஆய்வுக்காக, நீண்ட துாரம் அலைய வேண்டியிருந்தால், அரப்பு தழையை பறித்து, தலையிலும், காலணிகளுக்குள் வைத்துக்கொள்வோம்; உடல் சோர்வே தெரியாது.அரியவகை செடிமண்ணின் தன்மைக்கு தகுந்தபடிதான், மருத்துவ குணம் வாய்ந்த செடி, கொடிகள் வளர்கிறது. எவ்வளவு முயற்சித்தாலும், சிலவகை செடிகளின் நாற்றுக்களை உற்பத்தி செய்ய இயலவில்லை. பறவைகள் தின்ற பழத்தில் இருந்த கொட்டைகளில் இருந்து மட்டும்தான், சில வகை செடிகள் முளைக்கின்றன.

ஒரே செடி, தமிழகம் முழுவதும் கிடைக்காது. அந்தந்த ஊரிலேயே, தேவையான மாற்று செடி, கொடி, தழைகள் வளர்ந்திருக்கும். அவற்றை கண்டறிந்து, பயன்படுத்த வேண்டும்.ஆவணப்படுத்தும் திட்டம்?கடந்த, 20 ஆண்டுகளாக, தமிழகத்தின் பல பகுதிக்கும் சுற்றி வருகிறோம். பல்வேறு மரம், செடி, கொடிகளின் மருத்துவ தன்மையை கண்டறிந்துள்ளோம். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவின் உதவியுடன், இவற்றை ஆவணப்படுத்தி, புத்தகமாக வெளியிட முயற்சி எடுக்கப்படும். அரியவகை மூலிகை செடிகள் அடங்கிய பூங்காக்கள் அமைக்க, பசுமை ஆர்வலர்கள் திட்டமிட வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X