'பயங்கரவாதிகளை மன்னித்து பாக்., குடிமக்களாக ஏற்போம்' -இம்ரான் கானின் பகீர் பேட்டி

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.



latest tamil news



பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐநா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தேகிரீக்-ஐ-தாலிபான். இந்த அமைப்பு சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் தாலிபான்கள் உதவியுடன் பாகிஸ்தானில் இயங்கிவரும் பாகிஸ்தானி தாலிபான் அமைப்பின் ஆதரவை இம்ரான் கான் அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் இணக்கமாக செயல்பட இம்ரான்கான் விரும்புகிறார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. உள்நாட்டுக்குள் இயங்கிவரும் பயங்கரவாத செயல்களை இதன் மூலமாக இம்ரான்கான் தூண்டி வருகிறார் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துருக்கி ஊடகம் ஒன்றுக்கு இதுதொடர்பாக இம்ரான்கான் பேட்டி அளித்துள்ளார். 'பாகிஸ்தானி தாலிபான் அமைப்புடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது ஒரு சமாதான பேச்சுவார்த்தை அமையும்' என்று இம்ரான் இந்த ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் பலவித குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்புடன் பாகிஸ்தான் அரசு சமாதானமாகச் சென்றால் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை எவ்வாறு பாக்., தண்டிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த இம்ரான்கான், அவர்களை தங்கள் அரசு மன்னித்து, சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பயங்கரவாதிகளும் சாதாரண குடிமக்களாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


latest tamil news



பயங்கரவாத அமைப்புக்கு ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறாக வெளிப்படையாக ஊடகத்தில் ஆதரவு தெரிவிப்பது பல தரப்பிலிருந்து கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
07-அக்-202108:51:14 IST Report Abuse
 Muruga Vel சரித்திரத்தை புரட்டி பார்த்தால் முஸ்லிம்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது இழந்த தங்கள் பலத்தை பெருக்கி கொள்ளா கையாளும் ஒரு யுக்தி ..சமாதானம் ஆகிவிட்டது என்று சற்று அயர்ந்தால் அடுத்த க்ரூப் இவுங்கள காலி பண்ணிவிட்டு ஆட்சியை பிடிக்கும் ..
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
03-அக்-202116:42:25 IST Report Abuse
தமிழ்வேள் இவனது இந்த ஒரு அறிவிப்புக்காகவே, பாகிஸ்தானை முற்றிலும் அழித்து கப்ருஸ்தானாக்கிவிடலாம் ......இவனை பிரதமராக கொள்ளும் பாகிஸ்தானிகளும் பயங்கரவாதிகளாகவே இருப்பர் ...அந்த மண்ணை முற்றிலும் சுடுகாடாக்கிவிடுவது நல்லது ....
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
03-அக்-202113:57:54 IST Report Abuse
Nesan சந்தடி சாக்குலே காமிச்சிண்டாய வேலையை. இது எல்லாம் எதிர்பார்த்ததுதான். இவர்களால் தான் உலகுக்கு மீண்டும் ஒரு மகா யுத்தம் வரும் விரைவில். அவர்களுக்கு அணு ஆயுதத்தை விற்றால்கூட வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அறிவு கொழுந்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X