பொது செய்தி

தமிழ்நாடு

எது முக்கியம், மதுவா, உயிரா... நழுவும் 'குடி'மகன்கள்?

Added : அக் 02, 2021
Share
Advertisement
பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, முதலில் மதுக்கடைகள் திறப்பதற்குத்தான் அனுமதி கிடைத்தது. தற்போது, மது வாங்க வரும் 'குடி'மகன்கள், தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறதுசமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மது அருந்துவோரில் பலர், தடுப்பூசி செலுத்தவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புவதில்லை. 'குடி'மகன்கள் பலர், மது

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பே, முதலில் மதுக்கடைகள் திறப்பதற்குத்தான் அனுமதி கிடைத்தது. தற்போது, மது வாங்க வரும் 'குடி'மகன்கள், தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மது அருந்துவோரில் பலர், தடுப்பூசி செலுத்தவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புவதில்லை. 'குடி'மகன்கள் பலர், மது குடிக்கும் ஆர்வத்தில், தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்கின்றனர்; இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுதல் அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வு 'குடி'மகன்களிடம் வர வேண்டும். மது குடிப்பதைக் காட்டிலும், உயிர் காப்பதே முக்கியம் என்ற உணர்வு அவர்களிடம் வர வேண்டும்'' என்றனர்.

கோவையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், தடுப்பூசி செலுத்தியுள்ளீர்களா என ஊழியர்கள் மூலம் கேட்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தியதாக கூறினால், மது விற்கப்படுகிறது. இல்லையென்றால், மொபைல் எண், பெயர், முகவரியை வாங்கிய பின் மது விற்கப்படுகிறது; அந்த எண் மாவட்ட டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள் மூலம், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுகாதாரத்துறை மூலம் அவருக்கு தடுப்பூசி செலுத்தும் நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X