சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
விடுமுறை நாளில் பணிமாமல்லபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்.,6ம், 9ம் தேதிகளில் நடக்கிறது.வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாக ஊழியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்., 18ம் தேதி, சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தும், வேட்பு மனு தாக்கல் கருதி, ஆணைய உத்தரவால், அன்று ஊழியர்கள் பணியாற்றினர்.காந்தி ஜெயந்தி விடுமுறை நாளான
 சில வரி செய்திகள்

விடுமுறை நாளில் பணி

மாமல்லபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்.,6ம், 9ம் தேதிகளில் நடக்கிறது.வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாக ஊழியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்., 18ம் தேதி, சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தும், வேட்பு மனு தாக்கல் கருதி, ஆணைய உத்தரவால், அன்று ஊழியர்கள் பணியாற்றினர்.காந்தி ஜெயந்தி விடுமுறை நாளான நேற்றும், தேர்தல் ஏற்பட்டு பணிகள் கருதி, ஊழியர்கள் பணியாற்றினர்.

காந்தி ஜெயந்தி விழா


திருப்போரூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்போரூர் அடுத்த படூர் இந்துஸ்தான் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இணைந்து, சைக்கிள் பேரணி நடத்தியது.கேளம்பாக்கம் ஆய்வாளர் மணிமாறன் கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரியில் துவங்கி மாம்பாக்கம் வரை சென்று, கல்லுாரியில் நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X