பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு பேரணி

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உத்திரமேரூர்:நம்நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டு விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட துவங்கி 25 ஆண்டு விழா என, இரு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையில், நாடு முழுதும் சட்ட விழிப்புணர்வு மற்றும் அணுகல் நடவடிக்கை, அக்., 2 முதல் நவ., 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவையொட்டி, உத்திரமேரூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உத்திரமேரூர் அரசு மகளிர்
 சட்ட விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர்:நம்நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டு விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட துவங்கி 25 ஆண்டு விழா என, இரு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையில், நாடு முழுதும் சட்ட விழிப்புணர்வு மற்றும் அணுகல் நடவடிக்கை, அக்., 2 முதல் நவ., 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவையொட்டி, உத்திரமேரூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு பேரணி, நடந்தது.

வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், உத்திரமேரூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான வி.பிரேம்குமார், பேரணியை துவக்கி வைத்தார்.பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் சென்றது. இதில், பொதுமக்களுக்கு சட்டம் விழிப்புணர்வு குறித்து, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
03-அக்-202110:00:17 IST Report Abuse
R.RAMACHANDRAN சட்டம் படித்ததாகச் சொல்லும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞ்சர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கால கட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் சட்டப்படி நீதி நடத்தாமல் சூதாட்ட காலம் போல நடத்துகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X