பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு எதிராக அணி: எம்.பி. கார்த்தி ஆசை

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்புத்துார்-திருப்புத்துாரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் காங். எம்.பி. கார்த்தி பேசுகையில் 'பா.ஜ.வுக்கு எதிராககட்சிகள் அணி திரள காங்., அச்சாரமாக இருக்க வேண்டும்' என்றார்.மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காந்தி சிலைக்கும், காமராஜர் படத்திற்கும் அஞ்சலி செலுத்திய பின் கார்த்தி எம்.பி. பேசியதாவது: 'இன்றைய அரசியல் சூழலில்

திருப்புத்துார்-திருப்புத்துாரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் காங். எம்.பி. கார்த்தி பேசுகையில் 'பா.ஜ.வுக்கு எதிராககட்சிகள் அணி திரள காங்., அச்சாரமாக இருக்க வேண்டும்' என்றார்.மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காந்தி சிலைக்கும், காமராஜர் படத்திற்கும் அஞ்சலி செலுத்திய பின் கார்த்தி எம்.பி. பேசியதாவது: 'இன்றைய அரசியல் சூழலில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை, தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு நடக்க வேண்டியது அவசியமாகி விட்டது.மத்தியில் ஆளும் பா.ஜ., இந்திய சரித்திரத்தை திரித்து அவர்களதுஇயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு சாதகமாக அமைத்து வருகிறது. வட இந்தியாவில் கோட்சேவை புகழ்ந்து காந்தியை இகழ்ந்து குழந்தைகளுக்கு கூட தவறான போதனை நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மதச்சார்பின்மை, சமத்துவ கட்சிகள், சுதந்திரத்திற்காக போராடிய இயக்கங்கள் வலுப்பெற வேண்டும். பா.ஜ.வுக்கு எதிர்ப்பாக ஒரு அணி அமைய காங்.,கட்சி அச்சாரமாக இருக்க வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X