மகிழ்ச்சி டூ தொடர் மழை காரணமாக ஆலங்குடி கண்மாய் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

மகிழ்ச்சி டூ தொடர் மழை காரணமாக ஆலங்குடி கண்மாய் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : அக் 02, 2021
Share
சிவகங்கை-தொடர் மழையால் தமறாக்கி அருகே ஆலங்குடி கண்மாய்பெருக்கெடுத்து உப்பாறு ஆற்றில் ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்.,4 வரை பலத்த மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அக்.,1 முதல் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில்பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்வதால் மேலுார் தாலுகா
 மகிழ்ச்சி டூ தொடர் மழை காரணமாக ஆலங்குடி கண்மாய் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை-தொடர் மழையால் தமறாக்கி அருகே ஆலங்குடி கண்மாய்பெருக்கெடுத்து உப்பாறு ஆற்றில் ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்.,4 வரை பலத்த மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அக்.,1 முதல் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில்பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்வதால் மேலுார் தாலுகா திருவாதவூர் பகுதியில் பெருக்கெடுத்து வரும் மழை நீர் சிவகங்கை மாவட்டம்தமறாக்கி வடக்கில் உள்ளஆலங்குடி கண்மாயை நிரப்பி மறுகால் பாய்கிறது.

இந்த மழை நீர் தமறாக்கி தெற்கில் உள்ள எருமைக்குளம் கண்மாயை நிரப்பி கிளாதிரி, இலுப்பக்குடி, அரசனுார், ஏ.ஆர்., உசிலம்பட்டி, குமாரபட்டி, முடிகண்டம் உள்ளிட்ட கிராமப்பகுதி வழியாக உப்பாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இக்கண்மாய் மதகில் இருந்து மழை நீர் நீர்வீழ்ச்சி போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெறுவார்கள்.தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

மழைநீரால் மகிழ்ச்சிஎம்.ராமலிங்கம், மாவட்ட தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்சங்கம், சிவகங்கை: கடந்த 12 ஆண்டுக்கு பின் இது போன்று மழை நீர் ஆலங்குடி, எருமைக்குளம் கண்மாய்களை நிரப்பி மறுகால் உப்பாறுஆற்றில் பாய்கிறது. இதனால் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மானாமதுரை அருகே கல்குறிச்சியில் வைகை ஆற்றில் இம்மழை நீர் கலப்பதால் அது வரை விவசாயிகள் பயன்பெறுவர். இம்மழை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X