சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி...: காஞ்சிபுரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
தீக்குளித்து பெண் தற்கொலைகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கோளிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி பாலா, 35. தம்பதியிடையே வியாழக்கிழமை இரவு சண்டை நடந்துள்ளது.நேற்று முன்தினம், வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்றதும், வீட்டில் தனியாக இருந்த பாலா, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். தீ சூட்டில் கதறிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு

தீக்குளித்து பெண் தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கோளிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி பாலா, 35. தம்பதியிடையே வியாழக்கிழமை இரவு சண்டை நடந்துள்ளது.நேற்று முன்தினம், வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்றதும், வீட்டில் தனியாக இருந்த பாலா, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். தீ சூட்டில் கதறிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலா, சிகிச்சை பலனின்றி இறந்தார். காஞ்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆட்டோ மோதி வியாபாரி பலி


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், தாமல்வார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 51; மளிகை கடை வைத்திருந்தார்.காய்கறிகள் வாங்க, இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரில் செல்லும்போது, அரக்கோணம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, அவர் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமலிங்கத்தை, அவ்வழியே சென்றோர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X