அரசியல் செய்தி

தமிழ்நாடு

போதையில் சரியுது ஓட்டு வேட்பாளர்களுக்கு வேட்டு

Added : அக் 02, 2021
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.பெரும்பாலான இடங்களில் பெண் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்க செல்வதில்லை. குடும்பத்தை பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.அவர்களுக்கு பதிலாக, அவர்களின் கணவர்கள் மற்றும்
 போதையில் சரியுது ஓட்டு வேட்பாளர்களுக்கு வேட்டு

உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.பெரும்பாலான இடங்களில் பெண் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்க செல்வதில்லை. குடும்பத்தை பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அவர்களுக்கு பதிலாக, அவர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தான் பெரும் கூத்தே நடக்கிறது. ஆதரவாளர்களுக்கு சரக்கு, பிரியாணி கொடுத்தால் மட்டுமே அவர்கள் பிரசாரத்திற்கு வருகின்றனர்.மாலையில் மது குடித்து விட்டு வரும் ஆதரவாளர்கள், வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க தள்ளாடுகின்றனர். வாக்காளர்கள், 'என்ன இப்டி ஒரு வாடை வருது. கூட்டத்துல யாரோ குடிச்சிருக்காங்க' என கேட்டதும், திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் வேட்பாளர்கள் திரு திருவென முழித்து, 'அதை விடுங்கம்மா... எங்களுக்கே ஓட்டு போடுங்கள்' எனக் கூறி நைசாக நழுவுகின்றனர்.

சில இடங்களில் வேட்பாளர்களின் கணவர்களே, 'நீங்க எல்லாம் என்னோட மக்கள். உங்களுக்கு ஒண்ணுனா நாந்தான் வருவேன். நாம எல்லாம் ஒரே சாதி. உங்களுக்கு ஒரு பிரச்னை வந்தப்ப நான் வந்தேனா இல்லையானு நீங்களே சொல்லுங்க...' என, போதையில் பாச மழை பொழிகின்றனர்.குடித்திருப்பதை அறிந்த பெண் வாக்காளர்களும், 'இதெல்லாம் எப்டி உருப்டு... நம்மல பாத்துக்கும்' என மனசுக்குள் நினைத்துக் கொண்டு, 'உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம். நம்பிக்கையா போயிட்டு வாங்க' என துரத்தி விடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X