பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி கருடசேவை உற்சவம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் கருணீகர் தெருவில் உள்ள பஜனை கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது வாரத்தில் கருடசேவை உற்சவம் நடைபெறும். அதன்படி, மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, 24ம் ஆண்டு கருடசேவை உற்சவம் நடந்தது.நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில்
 புரட்டாசி கருடசேவை உற்சவம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் கருணீகர் தெருவில் உள்ள பஜனை கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது வாரத்தில் கருடசேவை உற்சவம் நடைபெறும்.

அதன்படி, மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, 24ம் ஆண்டு கருடசேவை உற்சவம் நடந்தது.நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி உத்திரமேரூரில் உள்ள, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.சுவாமியை பின் தொடர்ந்து பஜனை கோஷ்டியினர், பஜனை பாடல்களை பாடி சென்றனர். வழிநெடுகிலும் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும், பெருமாளை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X