இது தான் பதில்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது தான் பதில்

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
மடையத்துார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; 1,500க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன. பிரதான சாலை, தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். வார்டு தோறும் குப்பை தொட்டி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி, அறிவுத்திறன் போட்டி நடத்த வேண்டும். நுாலகம் தினமும் திறந்திருக்க வேண்டும். இளைஞர்களுக்கு மது தடுப்பு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இவற்றை
 இது தான் பதில்

மடையத்துார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; 1,500க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன. பிரதான சாலை, தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். வார்டு தோறும் குப்பை தொட்டி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி, அறிவுத்திறன் போட்டி நடத்த வேண்டும்.

நுாலகம் தினமும் திறந்திருக்க வேண்டும். இளைஞர்களுக்கு மது தடுப்பு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இவற்றை செய்பவருக்கே என் ஓட்டு.

வ.விநாயகம், 28,
மடையத்துார் ஊராட்சி, திருப்போரூர்

தண்டலம் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தினமும் குடிநீர் கிடைப்பதில்லை. பல சாலைகள் சேதமடைந்துள்ளன. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பொங்கல் விளையாட்டு விழாக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இப்பிரச்னைகளை தீர்ப்பவருக்கே என் ஓட்டு.

ஜி.அசோக்குமார், 32,
தண்டலம் ஊராட்சி, திருப்போரூர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X