இலங்கையில் சீன ஆதிக்கம்: கட்டுப்படுத்த இந்தியா முயற்சி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
இலங்கையில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த, நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து முயற்சி வருகிறது.சீனாவிடம் வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.அதிர்ச்சிஇதையடுத்து, 2017ல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு

இலங்கையில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த, நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து முயற்சி வருகிறது.latest tamil newsசீனாவிடம் வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.அதிர்ச்சிஇதையடுத்து, 2017ல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது; இது, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் பல வளர்ச்சி திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்திய ஆதரவுடன் செயல்படுத்துப்படும் திட்டங்களின் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன; இவை, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில் கொழும்பு துறைமுகம் அருகே, 10 ஆயிரத்து 39௦ கோடி ரூபாய் செலவில் துறைமுக நகரம் ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. கடலில் மண்ணை கொட்டி மேடாக்கி செயற்கை தீவாக இது உருவாக்கப்படுகிறது.

இலங்கை வரைபடத்துக்கு வெளியே ஒரு தனி நிலப்பரப்பை உருவாக்கும் சீனாவின் அதிபயங்கர திட்டம் இது. ஆனால், இந்த திட்டத்தை இலங்கை அரசோ, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் என்கிறது. இதற்கான மசோதா இலங்கை பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என கருதுகிறது. இதையடுத்து இலங்கையில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நம் வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஷிரிங்களா விரைவில் இலங்கைக்கு செல்ல உள்ளார். இவரது பயணத்துக்கு முன், கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்து உள்ளது. இலங்கை துறைமுக ஆணையம் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் கட்டும் ஒப்பந்தத்தை, இந்தியாவின் அதானி குழுமத்துடன் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 5,250 கோடி ரூபாய். இந்நிலையில் பிரதமர் மோடியை, தேசிய பாதுகாப்பு ஆலேசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் ஷிரிங்களா ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து இலங்கை நிலவரம் பற்றி ஆலோசித்தனர்.


latest tamil newsநடவடிக்கை

'தமிழகத்தின் பாதுகாப்பு தான் முக்கியம்' என அவர்களிடம் தெரிவித்த பிரதமர், அதை வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தமிழக பாதுகாப்புக்காக இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடிதம் எழுதுவார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டு ராணுவ பயிற்சிராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்தியா - இலங்கை ராணுவ வீரர்கள் இணைந்து, 'மித்ர சக்தி' என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் இதுவரை ஏழு முறை ஈடுபட்டுள்ளனர். எட்டாவது முறையாக இந்த கூட்டு ராணுவ பயிற்சி இலங்கையில் நாளை துவங்கி, 15ம் தேதி வரை நடக்க உள்ளது. பயங்கரவாத அச்சறுத்தல்களை எதிர்கொள்வது, முறியடிப்பது தான் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202120:37:22 IST Report Abuse
அப்புசாமி இலங்கைத் தமிழர்கள் இனத்தையே ஒழித்துக் கட்ட நினைத்த சிங்களவருக்கு சீனா ஆப்பு வெக்குது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-அக்-202108:46:16 IST Report Abuse
 Muruga Velஅதை நீங்க பார்த்தீங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-அக்-202114:44:51 IST Report Abuse
Ramesh Sargam சீனா, நூறுக்கும் அதிகமான நாடுகளுக்கு அதிகமான கடன் கொடுத்திருக்கிறது. அதில் பாக்கிஸ்தான், ஸ்ரீ இலங்கை, நேபால் போன்ற நாடுகளால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறது. பிறகு என்ன? வட்டியும், முதலுமாக சீனா, அந்த நாடுகளையே தன்வசப்படுத்தி கொள்ளும்.
Rate this:
Cancel
ONCOBALA - Jaffna,இலங்கை
03-அக்-202114:26:45 IST Report Abuse
ONCOBALA சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவர்களாக இருந்தவர்கள் விடுதலை புலிகளை மட்டுமே. புலிகளை அழிக்க இலங்கை இனவாத அரசுடன் கைகோர்த்து நின்று நிறைவேற்றியது. இது உலகறிந்த உண்மை. இந்த இனஅழிப்பு யுத்தத்திற்கு தெலுங்கன் 'கருணா' பங்கு அளப்பரியது. இப்போ சீனா இலங்கையை ஆக்ரமித்துவிட்ட்து என புலம்புவதில் பிரயோசனமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X