பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளில் ரவுண்ட்ஸ்: அசத்தும் நகராட்சி கமிஷனர்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிவகாசி: மக்களுக்கு சேவை செய்வது ஒரு அரசு ஊழியரின் கடமைதான். தனக்கான பணிகளை செய்வது கடமை தான் என்றாலும் அதில் உண்மையாகவும் நேர்மையாகவும் பணிபுரிவது வெகுசிலரே. அரசு ஊழியர்கள் பணிபுரிய குறிப்பிட்ட நேரம் உண்டு.வேலை நேரம் முடிந்தால் யாரிடமும் எதுவும் சொல்லாமலே அலுவலகத்தை விட்டு கிளம்பி விடலாம். இதில் கேள்வி கேட்பதற்கும் ஏதுமில்லை. ஆனாலும் ஒரு சிலர் வேலை நேரத்தை
 சைக்கிளில் ரவுண்ட்ஸ்: அசத்தும் நகராட்சி கமிஷனர்

சிவகாசி: மக்களுக்கு சேவை செய்வது ஒரு அரசு ஊழியரின் கடமைதான். தனக்கான பணிகளை செய்வது கடமை தான் என்றாலும் அதில் உண்மையாகவும் நேர்மையாகவும் பணிபுரிவது வெகுசிலரே. அரசு ஊழியர்கள் பணிபுரிய குறிப்பிட்ட நேரம் உண்டு.வேலை நேரம் முடிந்தால் யாரிடமும் எதுவும் சொல்லாமலே அலுவலகத்தை விட்டு கிளம்பி விடலாம். இதில் கேள்வி கேட்பதற்கும் ஏதுமில்லை.

ஆனாலும் ஒரு சிலர் வேலை நேரத்தை கணக்கிடாமல் தனக்கான பணியை சேவையாக கருதி மக்களுக்காக தொண்டாற்றுகின்றனர்.அந்த வகையில் சிவகாசி நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, காலை 6:00 மணிக்கு தனக்கான பணிகளை துவக்கி விடுகிறார். சைக்கிளிலே சிவகாசி நகர் முழுவதும் சுற்றி வருகிறார் . நகரில் நடைபெறும் துாய்மை பணிகளை நேரடியாக பார்வையிட்டு, துாய்மைப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உற்சாகப்படுத்துகிறார்.

அந்நேரத்தில் சந்திக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறார். காலையில் சப்ளை செய்யப்படும் குடிநீர் குறித்து கேட்டறிந்து பற்றாக்குறையை சரி செய்கிறார். துாய்மை பணியாளர்களுக்கு அவ்வப்போது கபசுர குடிநீர், கசாயம் வழங்கவும் ஏற்பாடு செய்கிறார்.சமீபத்தில் மாவட்டம் முழுவதும் நகரங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகாசியில் துாய்மை பணிகள் நடைபெறும்போது கமிஷனர் இரவு ஒரு மணி வரையிலும் இருந்து பார்வையிட்டு வீட்டிற்கு செல்கிறார். இவை அனைத்துமே ஒரு நகராட்சி கமிஷனருக்கு உரிய கடமை தான் என்றாலும் அதை சேவை மனப்பான்மை கொண்டு பணியாற்றி வருகிறார் பராத்தசாரதி.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
03-அக்-202120:02:12 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. மிக சிறந்த முறையில் தனது பணியை செய்யும் தம்பி பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் . இன்று உங்களை போன்ற அரசு அதிகாரிகளை காண்பது அரிது . நேர்மையான முறையில், அதிகாரத்தில் இருந்தும் மிக கனிவாக பிறரிடம் நடக்கும் உங்களின் பண்புக்கு வாழ்த்துக்கள் . தூய்மை மிகவும் முக்கியம் அதிலும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரமான மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்கள் என்பதை உணர்ந்து தூய்மை பணியாளர்களின் அதிகாரியாக இல்லாமல் அவர்களின் தோழனாக இருக்கும் உங்களின் மனப்பாங்கு போற்றுதலுக்கு உரியது . உங்களை போன்ற அதிகாரிகள் தான் இன்றைய நாட்டின் அத்தியாவசிய தேவை தம்பி . எனது தம்பியை நினைத்து மிகவும் பெருமை படுகின்றன .கடவுள் உங்களுடன் இருந்து என்றும் வழி நடத்துவார் தம்பி .
Rate this:
04-அக்-202110:40:22 IST Report Abuse
மோகனசுந்தரம்நீடுழி வாழ்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X