பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மியாவாக்கி காடுகள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சிவகாசி--சிவகாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி , சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மியாவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.அசோகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காகவும், பயனற்ற தரிசு, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்து பசுமை விடியல் என்ற

சிவகாசி--சிவகாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி , சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மியாவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.அசோகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காகவும், பயனற்ற தரிசு, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்து பசுமை விடியல் என்ற திட்டத்தின் கீழ் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் ஊருக்கு ஒரு மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள், பண்ணை குட்டை, தீவன பயிர்கள் என பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக, காரியாபட்டி, வத்திராயிருப்பு, இருக்கன்குடி பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும், என்றார். சப் கலெக்டர் பிரதிவிராஜ், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, தாசில்தார் ராஜ்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜெயகண்ணன், முத்தலீப் பாலசுப்பிரமணியன், ரவி, எக்ஸ்னோரா அமைப்பு நிர்வாகிகள் அபிரூபன், செந்தில்குமார், ரவி, வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X