சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாரதீய மஸ்துார் தலைவர் கொலையில் இருவர் கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
விருதுநகர்--விருதுநகரில் லாரி செட் உரிமையாளரும் பாரதீய மஸ்துார் யூனியன் மாவட்ட தலைவர் பால்பாண்டி 59, கொலை தொடர்பாக, இவரிடம் பணிபுரிந்த இரண்டு லோடுமேன்களான விருதுநகர் அனுமான் நகரை சேர்ந்த சூசை இமானுவேல் 46, பாண்டியன் நகரை சேர்ந்த மணிகண்டன் 35, கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தை சேர்ந்த பால்பாண்டி , ரயில்வே பீடர் ரோட்டில் அசோகன் லாரி செட் நடத்தி

விருதுநகர்--விருதுநகரில் லாரி செட் உரிமையாளரும் பாரதீய மஸ்துார் யூனியன் மாவட்ட தலைவர் பால்பாண்டி 59, கொலை தொடர்பாக, இவரிடம் பணிபுரிந்த இரண்டு லோடுமேன்களான விருதுநகர் அனுமான் நகரை சேர்ந்த சூசை இமானுவேல் 46, பாண்டியன் நகரை சேர்ந்த மணிகண்டன் 35, கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தை சேர்ந்த பால்பாண்டி , ரயில்வே பீடர் ரோட்டில் அசோகன் லாரி செட் நடத்தி வருகிறார். இரவு டூவீலரில் வீடு திரும்பும் போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேற்கு போலீசார் சி.சி.டி.வி.,கேமரா பதிவுப்படி விசாரித்ததில், பால்பாண்டியிடம் ஓராண்டுக்கு முன் வேலை பார்த்த சூசை இமானுவேல், மணிகண்டன் கொலையை செய்தது தெரியவர இருவரையும் கைது செய்தனர்.லாரியில் சரக்கை ஏற்றி இறக்கும் போது ஏற்படும் மூடைகளில் ஏற்படும் சேதம், மூடைகள் எடை குறைவாக இருப்பதாகவும் கூறி இருவரையும் ஓராண்டுக்கு முன் வேலையில் இருந்து நிறுத்தினார். வேறு எங்கும் வேலை கிடைக்காமல் அல்லாடி வந்த நிலையில் பால்பாண்டி மீது கோபம் கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பும் போது வெட்டி கொலை செய்ததாக போலீசில் கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X