பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியடிகள் பிறந்தநாள் விழா கொ்ண்டாட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விருதுநகர்-விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு அமைந்துள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.l காங்., சார்பில் நகர தலைவர் வெயிலுமுத்து தலைமையில் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகராட்சி

விருதுநகர்-விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு அமைந்துள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.l காங்., சார்பில் நகர தலைவர் வெயிலுமுத்து தலைமையில் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகராட்சி முன்னாள் துணை தலைவர் பாலகிருஷ்ணமூர்த்தி, சிவஞானபுரம் ஊராட்சி தலைவர்கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் நாகேந்திரன் பங்கேற்றனர்.l பா.ஜ., சார்பில் மாவட்ட அரசு தொடர்பு துணை தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கஜேந்திரன், பொது செயலாளர் பொன்ராஜ், துணை த்தலைவர் காமாட்சி, நகர தலைவர் புஷ்பக்குமார் பங்கேற்றனர்.l ம.நீ.ம., சார்பில் மாட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சைமணி, ஐ.டி.பிரிவு செயலாளர் நெல்சன்தாஸ், துணை செயலாளர் முனீஸ்வரன், மாணவரணி அமைப்பாளர் கவி அரசு, ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் பங்கேற்றனர்.ராஜபாளையம் ராஜபாளையத்தில் நகர் காங்., சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி, நகர தலைவர் சங்கர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாலிங்க ராஜா, குமாரசாமி ராஜா பங்கேற்றனர்.l செட்டியார்பட்டியில் காங்., நகர் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர் கணேசன், நெசவாளர் அணி ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.l தர்மாபுரம் காந்திஜி வாசகசாலை வளாகத்தில் பழைய பாளையம் ராஜூக்கள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தேசிய கொடி ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். வாசகசாலை தலைவர் பெத்துராஜா வரவேற்றார். செயலாளர் தர்மலிங்க ராஜா நன்றி கூறினார்.l அன்னப்பா ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்து விவேகானந்த கேந்திரம் ராஜபாளையம் கிளை சார்பில் ஆசிரியர்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கினர். குருகுல பள்ளி தாளாளர் மஞ்சுளா அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.l சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நான்கு கோட்டை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி ராஜா, சின்ன வெங்கட் ராஜா, ராம் சிங் ராஜா, ஜெகநாத ராஜா, ராம் சிங் ராஜா மரியாதை செலுத்தினர் சென்னை மாகாண பிரதமர் பி.எஸ் குமாரசாமி ராஜா உருவ படத்தை திறந்து வைத்தனர். சங்க இயக்குனர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X