சில்லரை தட்டுப்பாடு கடைக்காரர்கள் கடுப்பு: குடிமகன்களால் கொண்டாடலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில்லரை தட்டுப்பாடு கடைக்காரர்கள் கடுப்பு: குடிமகன்களால் கொண்டாடலாம்

Added : அக் 03, 2021
Share
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில் நடக்கிறது.இத்தேர்தலில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுவோர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பிரசார களத்தில் இறக்கப்பட்டுள்ள தொண்டர்களுக்கு தினமும்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில் நடக்கிறது.
இத்தேர்தலில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுவோர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பிரசார களத்தில் இறக்கப்பட்டுள்ள தொண்டர்களுக்கு தினமும் பணம், மது, பிரியாணி என, தாராளம் காட்டுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் தொழில்கள் நலிவடைந்து, இரு ஆண்டுகளாக மந்தமாகி கிடந்த பொருளாதாரம், தேர்தல் களத்தால் மேம்பட்டு உள்ளது.வாக்காளர்களிடம் திடீர் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் தேர்தல் என்பதால், பணப் புழக்கம் மேலும் அதிகரிக்கும்.

கடைக்கு சென்று தேவையான பொருள் வாங்குவோர், 500 ரூபாய் நோட்டுகளையே பெரும்பாலும் நீட்டுகின்றனர்.குறைந்த தொகைக்கே பொருட்கள் வாங்கினாலும், 500 ரூபாயை தருவதால், கடைக்காரர்கள் கடுப்பாகி உள்ளனர். 'வியாபாரம் அதிகமாவது நல்லதுதான். அதற்காக எல்லாருக்கும் சில்லரை தர நாங்கள் எங்கே போவது' என கடுகடுக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X