கைகளை தட்டினால் உடல் நலத்திற்கு நல்லது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைகளை தட்டினால் உடல் நலத்திற்கு நல்லது

Added : அக் 03, 2021
Share
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மூன்றாவது வார்டு மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குமார் இறந்ததால், இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 9ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.இதையொட்டி, அனந்தேரி ஊராட்சியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கூட்டம் நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள் பேசும்போது, மக்கள் யாரும் கை தட்டவில்லை.கடைசியில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மூன்றாவது வார்டு மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குமார் இறந்ததால், இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

வரும் 9ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.இதையொட்டி, அனந்தேரி ஊராட்சியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கூட்டம் நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள் பேசும்போது, மக்கள் யாரும் கை தட்டவில்லை.கடைசியில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பேசி, தி.மு.க., அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.

கை தட்டாத மக்களை பார்த்து, ''மனிதர்கள் அடிக்கடி கை தட்டினால் உடல் நலத்திற்கு நல்லது. எனவே, அடிக்கடி கை தட்டி உடல் நலத்தை காக்க வேண்டும்,'' என்றார்.இதை கேட்ட கூட்டத்தினர் பயங்கரமாக கைகளை தட்டினர். இதை பார்த்து, பேசி முடித்து அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்கள், 'இந்த ஐடியா நமக்கு வராம போச்சே' என, கமென்ட் அடித்து, பிரசாரத்திற்கு கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X