தமிழ்நாடு

 ஜார்ஜ் டவுன் மறு மேம்பாட்டு திட்ட பணிகள் துவக்கம்...! 'அம்ருத்' திட்டத்தில் வீடு வீடாக விபரம் சேகரிப்பு-

Added : அக் 03, 2021
Share
Advertisement
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில், சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியை மறு மேம்பாடு செய்வதற்கான கட்டட கணக்கெடுப்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.சென்னையில், வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு, ஜார்ஜ் டவுன் பகுதியில் விதி மீறல் கட்டடங்கள் அதிகரித்துள்ளன. பாதசாரிகள் நடந்து செல்ல கூட போதுமான பாதை இல்லாத அளவுக்கு, ஜார்ஜ் டவுனின் நிலை மோசமடைந்துள்ளது. இதனால்,
துவக்கம்...!



மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில், சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியை மறு மேம்பாடு செய்வதற்கான கட்டட கணக்கெடுப்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.சென்னையில், வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு, ஜார்ஜ் டவுன் பகுதியில் விதி மீறல் கட்டடங்கள் அதிகரித்துள்ளன. பாதசாரிகள் நடந்து செல்ல கூட போதுமான பாதை இல்லாத அளவுக்கு, ஜார்ஜ் டவுனின் நிலை மோசமடைந்துள்ளது. இதனால், இப்பகுதியை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.கடந்த 2019ல், அம்ரூத் திட்டத்தில் சென்னையில் ஜார்ஜ் டவுன், தாம்பரத்தை அடுத்த அகரம் தென் பகுதிகளை மறுமேம்பாடு செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனமான டுபிட்கோ, சி.எம்.டி.ஏ., ஆகியவை இணைந்து, இத்திட்டத்திற்கான பணிகளை துவங்கின.தமிழகத்தில் முதல் முறையாக, நெரிசல் மிகுந்த ஒரு நகரத்தை மறு மேம்பாடு செய்வதற்கான அறிவியல் பூர்வ அணுகுமுறை, ஜார்ஜ் டவுனில் துவங்கப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட பிரிவு, இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கி உள்ளது.மொத்தம் 370 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜார்ஜ் டவுனில் 11 ஆயிரத்து 300 கட்டடங்கள் உள்ளன. இதில், 99 சதவீத கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, 2014ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு வாயிலாக தெரியவந்து உள்ளது.மறு மேம்பாட்டு திட்டத்திற்காக, ஜார்ஜ் டவுன் பகுதி, 20 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் உள்ள கட்டடங்களின் விபரங்கள், துல்லியமாக சேகரிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது:ஜார்ஜ் டவுன் கட்டடங்கள், 20 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிலும், வீடு வீடாக சென்று, கல்லுாரி மாணவர்கள் வாயிலாக கட்டட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.முதல்கட்டமாக 1,300 கட்டடங்கள் உள்ள ஒரு பிளாக்கில் 600 கட்டடங்களின் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கென, பிரத்யேக 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது.இதில், திரட்டப்படும் தகவல்கள் தொகுக்கப்பட்டு, மக்கள் நிம்மதியாக நடமாடும் அளவுக்கு பாதை வசதி, பசுமை பகுதிகள், பாரம்பரிய சின்னங்கள், வாகன நிறுத்துமிடங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். கட்டடங்களின் உயரம் அதிகரிக்கப்படுவதன் வாயிலாக, காலி இடங்களை உருவாக்கும் வழிமுறையும் இதில் பரிசீலிக்கப்படுகிறது. இதன் பின், சட்ட ரீதியாக பல்வேறு பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X