பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : அக் 03, 2021
Share
Advertisement
தொழில் முனைவோர் கருத்தரங்கம்திண்டுக்கல்: ஜி.டி.என்., கலைக்கல்லுாரி தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். இணை பேராசிரியர்கள் பொன்னையா, ரவிச்சந்திரன் பேசினர். நிலவள வங்கி மேலாளர் மாரிமுத்து, திண்டுக்கல் வர்த்தக சங்க இணை செயலாளர் விக்னேஷ் தொழில் முனைவோர் திட்டங்கள்

தொழில் முனைவோர் கருத்தரங்கம்திண்டுக்கல்: ஜி.டி.என்., கலைக்கல்லுாரி தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். இணை பேராசிரியர்கள் பொன்னையா, ரவிச்சந்திரன் பேசினர். நிலவள வங்கி மேலாளர் மாரிமுத்து, திண்டுக்கல் வர்த்தக சங்க இணை செயலாளர் விக்னேஷ் தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்து பேசினர். சங்க இணை உறுப்பினர்கள் லாவண்யா, சக்திஷி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பொறியியல் தினவிழாதிண்டுக்கல்: கட்டடப் பொறியாளர் நலவாழ்வுச் சங்கம் சார்பில் பொறியாளர் தினவிழா நடந்தது. கட்டட பொறியாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சரவணன், செயலாளர் காந்தி, மண்டல தலைவர் பெஞ்சமின் ஆரோக்கியம், செயலாளர் ஜோசப்ராஜ், திண்டுக்கல் சங்க தலைவர் முத்துக்கிருஷ்ணன், செயலாளர் டேவிட் பிராங்கிளின், பொருளாளர் வெங்கடேஸ்வரா, துணைத் தலைவர் வரதராஜன், இணைச் செயலாளர் ரெஜிஸ், பொறியாளர் கணேசன் பங்கேற்றனர்.அறுந்து தொங்கிய மின்கம்பிகோபால்பட்டி: நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தொடங்கிய கன மழை இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்தது. இதனால் கோ.அய்யாபட்டியில் மின் கம்பம் சரிந்து மின்கம்பி அபாயகரமாக தொங்கியது. பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை இருந்தது. மேலும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு மேல் இதனை சரி செய்தனர்.தாய், மகள் மாயம்எரியோடு: உசிலம்பட்டியை அடுத்த நவாமரத்துபட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவரது முதல் மனைவி பாண்டீஸ்வரி. இரண்டாவது மனைவி பரமேஸ்வரி. பரமேஸ்வரிக்கு 6 வயதில் மகள் உள்ளார். கேரளாவில் வேலை பார்த்த பரமேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு நவாமரத்துபட்டி வந்தார். பாண்டீஸ்வரி வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார். வேடசந்தூர் வங்கிக்கு செல்வதாக கூறி மகளுடன் சென்ற பரமேஸ்வரி, வீடு திரும்பவில்லை. எரியோடு போலீசார் தாய், மகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X