பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு அறிவுரை

Added : அக் 03, 2021
Share
கோயம்பேடு, :கோயம்பேடு மார்க்கெட்டில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவருமான சுப்ரியா சாஹு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்வில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு, அதற்கு மாற்றாக

கோயம்பேடு, :கோயம்பேடு மார்க்கெட்டில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவருமான சுப்ரியா சாஹு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்வில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு, அதற்கு மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் குறித்து, வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து 'உத்கர்ஷ் குளோபல் பவுண்டேஷன்' என்ற அமைப்புடன் இணைந்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, 5,000 துணிப்பைகள் வழங்கப்பட்டன.அரசால் தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து கண்காட்சி நடந்தது.சுப்ரியா சாஹு கூறுகையில், ''கோயம்பேடு மார்க்கெட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதன் மூலம், உலகிற்கு முன்மாதிரியான மார்க்கெட்டாக மாற்ற முடியும். அரசு சார்பில், இதற்கான முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார்.ககன்தீப்சிங் பேடி கூறுகையில், ''கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் தடையை கடைப்பிடித்தால், சென்னை முழுவதும் வெற்றிகரமாக அதை கொண்டு செல்ல முடியும்.கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தாமல், துணி பைகளை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X