பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை பயன்பாட்டில் அவசியம் கவனம் தேவை

Added : அக் 03, 2021
Share
Advertisement
வடமதுரை-'நீர் நிலைகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வடமதுரை சுகாதார மேற்பார்வையாளர் டி.ஆர்.முத்துகுமாரசாமி கேட்டு கொண்டுள்ளார்.பருவமழை பெய்வதால் ஆங்காங்கே கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மண் எடுத்த பள்ளங்களில் நீர் தேங்கும். இவற்றை பயன்படுத்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.குழந்தைகள், சிறுவர்களை நீர்நிலை

வடமதுரை-'நீர் நிலைகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வடமதுரை சுகாதார மேற்பார்வையாளர் டி.ஆர்.முத்துகுமாரசாமி கேட்டு கொண்டுள்ளார்.பருவமழை பெய்வதால் ஆங்காங்கே கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மண் எடுத்த பள்ளங்களில் நீர் தேங்கும். இவற்றை பயன்படுத்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.குழந்தைகள், சிறுவர்களை நீர்நிலை அருகே செல்ல அனுமதிக்க கூடாது. மழைக்காலங்களில் குளோரின் கலந்த குடிநீரை, காய்ச்சிய பிறகே பயன்படுத்த வேண்டும். பலவித பொருள்கள் கலந்து அசுத்தமான நீர்நிலைகளில் இருந்து நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மழை நீரில் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் உட்பட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். தேங்காய் மட்டை, டயர், பிளாஸ்டிக் பொருள்கள் கிடந்தால் அகற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X