பொது செய்தி

தமிழ்நாடு

காவலர் குறைகளுக்கு தீர்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : ''குறைதீர் முகாமில் காவலர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட காவலர்களின் குறைகள் தொடர்பான குறைதீர் முகாம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.இதில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மனுக்களை பெற்றார். பணியிட

சென்னை : ''குறைதீர் முகாமில் காவலர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட காவலர்களின் குறைகள் தொடர்பான குறைதீர் முகாம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.இதில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மனுக்களை பெற்றார். பணியிட மாறுதல், காவலர் வீட்டு வசதி குடியிருப்பில் இருப்பிடம், தங்கள் மீதான குற்றவியல் பிரச்னை நீக்க கோருதல், பதவி உயர்வு உள்ளிட்டவை குறித்து, காவலர்கள் மனு அளித்தனர். ஆவடி, தாம்பரம் மாநகராட்சி எல்லை பகுதியில் பணியிட மாறுதல் கோரியும், போலீசார் மனு அளித்தனர்.நிகழ்ச்சியில், கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், ''அனைவரின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, குறைகளுக்கு தீர்வு காணப்படும்.''தீர்வு காணப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்படாத மனுக்கள் என, வகைப்படுத்தப்பட்டு, வரும் 16ம் தேதி டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து, மாநிலம் முழுதும், தீர்வு காணப்படாத காவலர்களின் மனுக்கள் அனைத்தும், வரும் 30ம் தேதி டி.ஜி.பி., தலைமையில் நடைபெறும் முகாமில் தீர்வு காணப்படும் என, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X