பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பலர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலைக்கு கலெக்டர் விசாகன், எஸ்.பி., சீனிவாசன், கமிஷனர் சிவசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தி கிராம பல்கலையில், வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த

திண்டுக்கல்- -காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பலர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலைக்கு கலெக்டர் விசாகன், எஸ்.பி., சீனிவாசன், கமிஷனர் சிவசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தி கிராம பல்கலையில், வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த விழாவில் துணை வேந்தர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் சிவக்குமார், இயக்குநர் தமிழ்மணி, விஞ்ஞானி ஸ்ரீகுமாரி, தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் பங்கேற்றனர்.திண்டுக்கல் காங்., சார்பில் நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் மரியாதை செலுத்தினர். ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், வழிகாட்டு குழுத் தலைவர் முகமது சித்திக் பங்கேற்றனர். மதர்தெரசா லயன்ஸ் சங்க தலைவர் செபஸ்தியார் தலைமையில் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் சாமி, வில்லியம் சகாயராஜ், லியோ ஜெரால்டு ரவி கலந்து கொண்டனர்.சின்னாளபட்டியில் காமராஜர் தேசிய பேரவை விழாவில் காங்., தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் தனலட்சுமி, கோபிசெல்வி, ஸ்டெல்லா, வட்டார தலைவர் சிதம்பரம் பங்கேற்றனர்.பிள்ளையார்நத்தம் காங்., சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. துணைத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லை காவலர் தியாகிகள் சங்கம் சார்பில் தியாகி ராமு. ராமசாமி, காங்., தலைவர் கரூர் காமராஜ், துணை தலைவர் தனலட்சுமி காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சின்னாளபட்டியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் கலியமூர்த்தி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். செயல் அலுவலர் பிரகந்தநாயகி மரக்கன்று நடுவதை துவக்கி வைத்தார். வாணியர் சமூக நிர்வாகிகள் கணேசன், பாண்டி, நாகரமேஷ், குருசாமி, மகராஜன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வடமதுரை: கலைமகள் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி விழாவிற்கு தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். இயக்குனர் அருள்மணி, பி.டி.ஏ., தலைவர்கள் குப்பாச்சி, பழனிச்சாமி, முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் ராமு வரவேற்றார். பேச்சு போட்டியில் வென்ற முதல் 3 மாணவர்கள் முறையே கோகிலா, சிவபானா, ஜீவாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு: ஈஷா காவிரி கூக்குரல் திட்டத்தின் கீழ் கிராமத் தலைவர் தர்மர், நேதாஜி மக்கள் அறக்கட்டளை நிறுவனர் சிவா, ஒருங்கிணைப்பாளர்கள் அருண்பாண்டியன், விஜய், நில உரிமையாளர் செல்வராஜ், பொதுமக்கள் பங்கேற்றனர். 1,400 செம்மரம், சந்தனம், மகோகனி கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலக்கோயில்பட்டியில் பா.ஜ., சேவைப் பிரிவு தலைவர் தங்கப்பாண்டி தலைமையில் இளைஞர்கள் மரக்கன்று நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X