பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் 'ரியாலிட்டி ஷோ'வுக்கு வருவேன்

Added : அக் 03, 2021
Share
Advertisement
தமிழில், மேகா படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே. டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அமைதியாக வந்து சென்ற இவர், 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'சர்வைவர்' என்ற, 'ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்றது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால், முதல் நபராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர், நம்
 மீண்டும் 'ரியாலிட்டி  ஷோ'வுக்கு வருவேன்



தமிழில், மேகா படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே. டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அமைதியாக வந்து சென்ற இவர், 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'சர்வைவர்' என்ற, 'ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்றது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால், முதல் நபராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர், நம் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எப்படி முடிவெடுத்தீர்கள்?நிகழ்ச்சியில் நானே விருப்பப்பட்டு தான் பங்கேற்றேன். ரொம்ப, 'ரிஸ்க்' என்பது தெரியும். 'அட்வெஞ்சர்' மிகவும் பிடிக்கும். சர்வைவர் வாழ்க்கையை வாழ நினைத்தேன். என் முதல் ரியாலிட்டி ஷோ இது. அதனால், அனுபவத்திற்காகவே இதில் பங்கேற்றேன். நான் எவ்வளவு உறுதியான பெண் என்பதையும் காட்ட நினைத்தேன். அது எனக்கும் தெரிய வேண்டும்.இதில் கற்றுக்கொண்டது...?இது ஒரு, 'மைன்ட் கில்லிங் கேம்!' எவ்வளவு தான் நடித்தாலும், பங்கேற்பாளர்களின் உண்மை முகம் கண்டிப்பாக வெளியே வரும். இதில் வெற்றி பெற, உடல் வலிமையோடு, மன வலிமையும் மிக முக்கியம்.நாம் ஒவ்வொரு வரும் இதுபோல் சர்வைவராக வாழ்ந்து பார்த்தால், நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு மேலானது என்பது தெரியும். வீட்டில் இருந்த போது ஒதுக்கிய பல உணவுப்பொருள், இப்போது வரமாக தெரிகிறது. வீட்டுக்கு வந்ததும் ரொம்பவே வருத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வரவே மூன்று நாட்கள் ஆனது. வீட்டுக்கு வந்ததும் என் அம்மா, 'நல்லவேளை சீக்கிரமே வந்து விட்டாய்' என்றார்.இந்நிகழ்ச்சி பற்றி என்னென்னவோ கிசுகிசுக்கப்படுகிறதே?இந்த நிகழ்ச்சி ஏற்கனவே திரைக்கதையாக உருவாக்கி எடுக்கப்பட்டது இல்லை. அப்படியிருந்தால் நான் முதலில் வெளியேறி இருக்க மாட்டேன். காட்டில் முதல் நாள் ரொம்பவே சிரமப்பட்டோம்.குளிப்பது உள்ளிட்ட காலைக் கடன்களை கூட சரியாக செய்ய முடியவில்லை. முதல் மூன்று நாள் சரியாக சாப்பிட முடியாமல் பசியில் அவதிப்பட்டேன். மூன்று நாளும் பழங்கள் மட்டுமே சாப்பாடு. தண்ணீர் மட்டுமே சுத்தமாக இருந்தது. உடலில் சில தடிப்புகளும் வந்து விட்டது. இன்னும் முழுமையாக சரியாகவில்லை.உங்கள் கணிப்பில் யார் வெற்றி பெறுவார்?போட்டியில் மற்றவர்களை காட்டிலும், அம்ஜத் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு. உமாபதிக்கும் வாய்ப்பு உள்ளது. பார்வதியை பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை. பொதுவாக அவர் நல்ல பெண். ஆனால், சர்வைவர் ஷோ என்பதை அவர் மறந்து விட்டார் என்று தான் சொல்வேன்.அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?இரண்டு படங்களில் நடித்துள்ளேன். விரைவில் வெளியாகிறது. மீண்டும் சர்வைவர் போன்ற நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்பேன். துறையில் அனைவருமே சமம். நடிகர்களுக்கு தரும் மரியாதை, முக்கியத்துவம் அனைத்தும் நடிகை உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரியே வழங்க வேண்டும். இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது. 'டாப்'பில் உள்ளவர்கள் இதுபற்றி பேச வேண்டும்.அரசியல் ஆசை...?அரசியல் ஆசை எல்லாம் எனக்கு இல்லை. சோஷியல் மீடியாவை பொறுத்தவரை, நல்லது கெட்டது எல்லாமே உண்டு. 'நெகட்டிவிட்டி' நிறைய உண்டு. கெட்டதை ஒதுக்கி, நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். - நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X