பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாட்டில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு, பயன்பாட்டில் இருந்ததாக வேளாண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது, 6,000க்கும் குறைவான நாட்டு நெல் ரகங்களே உள்ளன.சமீபத்திய அறிவியல் ஆய்வின் படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்களுக்கு, 12 வகையான நாட்டு நெல் ரகங்கள், ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யும் என, கண்டறியப்பட்டுள்ளது.ஆய்வின் இணை ஆசிரியரான ஒடிசாவைச் சேர்ந்த



நாட்டில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு, பயன்பாட்டில் இருந்ததாக வேளாண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது, 6,000க்கும் குறைவான நாட்டு நெல் ரகங்களே உள்ளன.சமீபத்திய அறிவியல் ஆய்வின் படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்களுக்கு, 12 வகையான நாட்டு நெல் ரகங்கள், ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யும் என, கண்டறியப்பட்டுள்ளது.ஆய்வின் இணை ஆசிரியரான ஒடிசாவைச் சேர்ந்த முனைவர் தேபால் தேப், 1,400 நாட்டு நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறார்.இவரை போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.தமிழகத்தில், 'தொண்டை மண்டலம்' என்ற அறக்கட்டளையினர், 2019 முதல் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முயற்சியில், ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக், இதுவரை, 156 நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.நேற்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, திருநின்றவூர் அடுத்த கொமக்கம்பேடு கிராமத்தில், 190 நாட்டு நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டன.தன்னார்வலர்கள், குடும்பத்தினரோடு இணைந்து நடவு பணிக்கு உதவினர்.தொலைத்ததைதேடுகிறோம்!நம்மிடம் இருந்த நாட்டு நெல் ரகங்களை தொலைத்து விட்டோம். தொலைத்ததை தேடும் பெரும் முயற்சியில், தன்னார்வலனாக என்னை இணைத்துக் கொண்டேன். விடுமுறை நாட்களில் இந்த பணியில் ஈடுபடுவேன்.-அரிகரகுமார், 34;ஐ.டி. ஊழியர். தன்னார்வலர்.நாட்டு நெல் ரகங்களை மீட்டெடுக்க, அதன் விதைகளை எங்களது அறக்கட்டளை வாயிலாக சேகரிக்கிறோம். இரண்டு ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது நாற்று நடவு செய்வது, விதை நெல் சேகரிப்புக்காக மட்டுமே. கலப்பு இல்லாத விதை நெல்லை மீட்டெடுக்க, பல்வேறு ஆய்வு பணிகள் செய்துள்ளோம். அதன்படி செயல்படுகிறோம்.தொண்டை மண்டலம் அறக்கட்டளை அமைப்பினர் -- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X