அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீராத பங்காளி சண்டை அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேச, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தார். அவரை வரவேற்று, அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் பல இடங்களில் 'போஸ்டர்'
 தீராத பங்காளி சண்டை அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேச, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தார்.

அவரை வரவேற்று, அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் பல இடங்களில் 'போஸ்டர்' ஒட்டப்பட்டது.இதில், மாவட்ட அம்மா பேரவை இணை செயலர் நந்தகுமார் என்பவர் பெயரில் ஒட்டிய போஸ்டரில், மாவட்ட செயலரான சோமசுந்தரம் படம், பெயர் இடம் பெறாமல், மற்ற அனைத்து நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது:மாவட்ட செயலர் சோமசுந்தரத்துடன் நெருங்கி பழகும் மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இருக்கின்றனர். மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போஸ்டர் ஒட்டிய நந்தகுமாருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு உண்டு.மாணவர் அணி நிர்வாகி குடும்பத்துக்கு, மாவட்ட செயலர் அதிக சலுகை கொடுக்கிறார். இதனால், மாவட்ட செயலர் சோமசுந்தரம், நந்தகுமார் இடையே பிரச்னை எழுகிறது.

உத்திரமேரூர் தொகுதியில் சோமசுந்தரம் தோற்றதற்கு, மாணவர் அணி நிர்வாகிகள் தான் காரணம் என, நந்தகுமார் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.ஆனாலும், மாணவர் அணி நிர்வாகிககளை, மாவட்ட செயலர் சோமசுந்தரம் கூடவே வைத்திருப்பதால், கருத்து வேறுபாடு உச்சகட்டத்துக்கு சென்று, போஸ்டரில் மாவட்ட செயலர் படத்தை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X