பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் தோஷம் தீர்க்கும் நவகிரஹ ஸ்தலங்கள்!

Added : அக் 03, 2021
Share
Advertisement
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரஹங்களுக்கென, தமிழகத்தில் சில இடங்களில், சோழ மன்னர் ஆட்சி காலத்தில், நவகிரஹ ஆலயங்கள் கட்டப்பட்டன. அவை, தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு, திருவெண்காடு போன்ற பகுதிகளில் உள்ளன.சென்னையில் இருந்து, 300 கி.மீ.,க்கும் மேல் துாரம் கொண்ட இக்கோவில்களுக்கு செல்ல, பணம் மற்றும் நேர விரயம் ஆகும்.இதன் காரணமாக,

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரஹங்களுக்கென, தமிழகத்தில் சில இடங்களில், சோழ மன்னர் ஆட்சி காலத்தில், நவகிரஹ ஆலயங்கள் கட்டப்பட்டன. அவை, தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு, திருவெண்காடு போன்ற பகுதிகளில் உள்ளன.சென்னையில் இருந்து, 300 கி.மீ.,க்கும் மேல் துாரம் கொண்ட இக்கோவில்களுக்கு செல்ல, பணம் மற்றும் நேர விரயம் ஆகும்.இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், தோஷம் மற்றும் பரிகாரங்களுக்கு அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.இதுபோன்ற மக்களுக்கு வரப்பிரசாதமாக, புறநகரை சுற்றி நவகிரகத்திற்கென தனித்தனி கோவில்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளன.சென்னை, குன்றத்துார் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இக்கோவில்கள் உள்ளன. கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் சூரியன் ஸ்தலமாகவும், சோமங்கலம், சோமநாதேஸ்வரர் சந்திரன் ஸ்தலமாகவும் உள்ளன.பூந்தமல்லி, வைத்தீஸ்வரர் செவ்வாய் ஸ்தலமாகவும், கோவூர் திருமேனீஸ்வரர் புதன் ஸ்தலமாகவும், போரூர் ராமநாதேஸ்வரர் குரு ஸ்தலமாகவும் அறியப்பட்டுள்ளன.மாங்காடு வெள்ளீஸ்வரர் சுக்கிரன் ஸ்தலமாகவும், பொழிச்சலுார் அகஸ்தீஸ்வரர் சனி ஸ்தலமாகவும், குன்றத்துார் திருநாகேஸ்வரர் ராகு ஸ்தலமாகவும், கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கேது ஸ்தலமாகவும் உள்ளன.அறநிலையத்துறை வசம் உள்ள இக்கோவில்களை பிரபலப்படுத்த, 20 ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா துறை வாயிலாக, இக்கோவில்களை ஒருங்கிணைத்து, நவகிரஹ சுற்றுலா, பேக்கேஜ் முறையில் அரசே நடத்தியது.பின், சில காரணங்களால் இந்த சுற்றுலா திட்டம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகளாக பிரபலமடைந்து வரும் இக்கோவில்களுக்கு, நவகிரஹ தோஷம் கழிக்க, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வர துவங்கியுள்ளனர்.தி.மு.க., அரசு, இக்கோவில்களை பிரபலப்படுத்தும் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அறநிலையத் துறை-, சுற்றுலா துறை இணைந்து, நவகிரஹ கோவில்களுக்கு பேருந்து சேவையை இயக்க முன்வர வேண்டும்.அப்படி செய்தால், கோவில்கள் பிரபலமடைவதுடன், குறைந்த பொருட் செலவில், தோஷம் நீக்கும் பரிகாரங்களை மக்கள் செய்யலாம். அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.பயண துாரம்!கொளப்பாக்கம்- - சோமங்கலம் 12 கி.மீ.,சோமங்கலம்- - பூந்தமல்லி 12 கி.மீ.,பூந்தமல்லி- - கோவூர் 9 கி.மீ.,கோவூர்- - போரூர் 7 கி.மீ.,போரூர்- - மாங்காடு 9 கி.மீ.,மாங்காடு- - பொழிச்சலுார் 11 கி.மீ.,பொழிச்சலுார்- - குன்றத்துார் 8 கி.மீ.,குன்றத்துார்- - கெருகம்பாக்கம் 5 கி.மீ.,நவகிரஹம் இடம் ஸ்தலம்சூரியன் கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர்சந்திரன் சோமங்கலம் சோமநாதேஸ்வரர்செவ்வாய் பூந்தமல்லி வைத்தீஸ்வரர்புதன் கோவூர் திருமேனீஸ்வரர்குரு போரூர் ராமநாதேஸ்வரர்சுக்கிரன் மாங்காடு வெள்ளீஸ்வரர்சனி பொழிச்சலுார் அகஸ்தீஸ்வரர்ராகு குன்றத்துார் திருநாகேஸ்வரர்கேது கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர்பூஜை முறை!நவகிரஹம் பலன் வழிபடும் முறைசூரியன் சகல காரிய சித்திகள் கோதுமை பண்டங்கள் நிவேதனம்சந்திரன் காரிய தடங்கல் தீர 7 தீபம், வெள்ளை ஆடைசெவ்வாய் நோய் தீர சிவப்பு ஆடை, செம்பு, துவரை தானியம்புதன் கல்வி, ஞானம் பச்சை பயிறு, பச்சை ஆடை, 17 தீபம்குரு திருமண தடை மஞ்சள் ஆடை, கொண்டை கடலை, 24 தீபம், தொடர்ந்து 6 வாரங்கள்சுக்கிரன் வருமை தீர, மகப்பேறு கிடைக்க 13 தீபம், வெள்ளை ஆடை, மொச்சை, தொடர்ந்து 7 வாரங்கள்சனி வியாதி, கடன் தீர கருப்பு ஆடை, எல்லு தானியம், எல்லு தீபம்ராகு மன, உடல் ரோகம் தீர கரு நீல ஆடை, பச்சை உளுந்து, தொடர்ந்து 7 வாரம்கேது வம்பு, வழக்குகள் பல வண்ணங்கள் இடம் பெற்ற வெள்ளை ஆடை, கொல்லு, 7 தீபம் - நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X