பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவு வாகனங்களுக்கான பராமரிப்பு மையம் துவக்கம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை, :சென்னை மாநகராட்சியில், துாய்மை பணி மேற்கொள்ளும், 'உர்பேசர் சுமித்' நிறுவனத்தின், பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில், 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அதில், ஏழு மண்டலங்களில் குப்பை யைாளும் பணியை, உர்பேசர் சுமித் நிறுவனம்

சென்னை, :சென்னை மாநகராட்சியில், துாய்மை பணி மேற்கொள்ளும், 'உர்பேசர் சுமித்' நிறுவனத்தின், பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில், 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அதில், ஏழு மண்டலங்களில் குப்பை யைாளும் பணியை, உர்பேசர் சுமித் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் தினசரி, 2,919 பேட்டரி வாகனங்கள், 125 கனரக வாகனங்கள், 38 சாலை பெருக்கும் இயந்திரங்கள் மற்றும் 10 ஆயிரத்து, 844 பணியாளர்களுடன் துாய்மை பணியை செய்து வருகிறது.இந்த மண்டலங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் குப்பை சேகரிக்க ஏதுவாக, சிறிய வகையிலான மூன்று சக்கர மிதிவண்டிகளை, அமைச்சர் நேரு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், துாய்மை பணியாளர்களுக்கு மழைக்கால அங்கிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ராயப்பேட்டையில், வாகன பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மையத்தையும், அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்டோர், 24 மணி நேரமும் பணியாற்ற உள்ளனர். இந்த மையத்தில், எரிபொருள் நிரப்பும் மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொழில்நுட்ப பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் மனிஷ், ஷரண்யா அரி, தலைமை பொறியாளர் மகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X